For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிம்மதியான தூக்கம் வேணுமா? கம்ப்யூட்டரை படுக்கை அருகில் வெக்காதீங்க!!!

By Maha
|

Bedroom
மனிதனுக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. நன்றாக தூங்கும் மனிதன் இளமையோடு இருப்பான், முதுமை அவனை நெருங்காது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தை, அது உலோகத்தால் ஆனதுதானே என்று நினைத்து ஓய்வு தராவிட்டால் என்ஜின் பழுதாகி விடும். அது போல தினமும் உடலாலும், மனதாலும் வேலை செய்யும் மனிதனுக்கும் ஓய்வு என்னும் தூக்கம் இல்லையென்றால் உடல் ஆரோக்கியமும்- மன ஆரோக்கியமும், செயல் திறனும் குறைந்துபோய்விடும். என்ன நிம்மதியா தூங்க ஆசையா இருக்கா?

நிம்மதியான தூக்கம் பெற இதோ சில டிப்ஸ்...

1. நல்ல தூக்கத்திற்கு படுக்கை, தலையணை இரண்டும் மிக முக்கியமானது. அதனால் இந்த இரண்டையும் கவனமாக பார்த்து வாங்கணும். படுக்கையை வாங்குவதற்கு முன் அது மேடு, பள்ளம் இல்லாமல் சமமாக இருக்குமாறு வாங்கவேண்டும். அதன் அழகில் மயங்கி வாங்கினால், நாம் ஆரோக்கியத்தை தான் இழக்க வேண்டியதாகிவிடும்.

2. தூக்கத்திற்கும், தலையணைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. அந்த தலையணை தலையையும், கழுத்தையும் பாலம்போல தாங்கவேண்டும். அப்படி இருந்தால் தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டமானது தங்கு தடையின்றி சென்று தூக்கம் நன்றாக வரும்.

3. மனிதனின் மூளையானது வெளிச்சத்தை பார்த்த உடன் விழிப்பு நிலைக்கு வந்துவிடும். எனவே படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இல்லாமல், ஜன்னல் ஓரத்தில் திரைகளை அமைத்து வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திடீர் வெளிச்சம் பட்டால் தூக்கம் கலையும்.

4. படுக்கை அறை லேசாக குளிர்ச்சியுடன் இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்து படுங்கள்.

5. மேலும் செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்க வேண்டாம். அப்படி தூங்கினால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.

6. படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்க வேண்டாம். ஒருவேளை வைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தால் தூங்க போகும்போது பிளக்குக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை துண்டித்து விடவும். ஆப்-செய்ய மறந்துவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டெலிவிஷன் போன்றவற்றில் இருந்து காந்த அலைகள் வெளியேறி தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

என்ன நண்பர்களே, இனிமேல் நல்லா நிம்மதியா தூங்க ரெடியா!!!

English summary

is it safe to have computer in bedroom? | நிம்மதியான தூக்கம் வேணுமா? கம்ப்யூட்டரை படுக்கை அருகில் வெக்காதீங்க!!!

Bed room is only for sleeping or taking rest. And it can be a health issue also. If we use computer in bed room then it creates some disturbance for taking rest.
Story first published: Friday, June 15, 2012, 12:23 [IST]
Desktop Bottom Promotion