கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

By:

இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும்.

எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும். கண்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிவரும் கதிர்கள் தான் காரணம். எப்படியெனில் அந்த கதிர்கள் கண்களில் உள்ள நீரை வறட்சியடையச் செய்வதோடு, எரிச்சல், அரிப்பு, சோர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. ஆகவே அப்போது கண்களை பாதுகாக்க, ஒருசில செயல்களை மேற்கொண்டு வந்தால், கண்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு தடுக்கலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

நிறைய கண் மருத்துவர்கள் உணவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். ஏனெனில் பொதுவாக ஃபேட்டி ஆசிட்கள் கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது. எனவே இந்த சத்துக்கள் அதிகம் உள்ள கடல் உணவுகளான் மீன்களில் சாலமன் மற்றும் ஆளி விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கண்களில் வறட்சி தடுக்கப்படுவதோடு, வயிற்றில் ஏற்படும் உப்புசமும் சரியாகும்.

கண்களை கழுவுதல்

கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ரிலாக்ஸ்

கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி சிறிது நேரம் உட்கார்ந்தால், கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.

இடைவேளை

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

ரோஸ் வாட்டர்

கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

See next photo feature article

தண்ணீர்

அதிகமான தண்ணீர் குடித்தால், கண்களில் எந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம். ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.

Read more about: health, wellness, eye care, ஆரோக்கியம், உடல் நலம், கண் பராமரிப்பு
English summary

Home Remedies To Cure Dry Eyes | கண்கள் வறண்டு இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

Dry eyes can make it difficult to keep the eyes open. If you close the eyes, it burns. So, here are home remedies to get rid of dry eyes.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter