For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப் போடாதீங்க...

By Maha
|

வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விதைகளை எப்போதும், தூக்கிப் போடுவோம். ஏனெனில் அவற்றில் எந்த ஒரு ஆரோக்கியமும் இல்லை என்பதற்காகத் தான். தெரிந்தோ, தெரியாமலோ, இதுவரை நாம் தூக்கிப் போட்டுவிட்டோம். ஆனால் இனிமேல் அவற்றின் விதைகளைத் தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விதைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. அத்தகைய காய்கறி மற்றும் பழங்களின் விதைகளால், நமது உடலில் ஏற்படும் பல நோய்களைத் தடுக்கலாம். எனவே இனிமேல் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடும் போது, அதன் விதைகளையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள். இப்போது எந்த காய் மற்றும் பழங்களின் விதைகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணிக்காய் விதை

டயட் மேற்கொள்வோருக்கு பூசணிக்காயின் விதைகள் மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றில் குறைந்த அளவு கலோரியும், கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் எலும்புகளுக்கு வலுவூட்டுகின்ற, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய சத்துக்களான இரும்பு மற்றும ஜிங்க் இருக்கின்றன. மேலும் குடலில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால், பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டால் சரியாகிவிடும். வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை பூசணிக்காயின் விதைகள் சரிசெய்துவிடும்.

தக்காளி விதைகள்

சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.

குடைமிளகாய் விதைகள்

தற்போது பல வகையான குடைமிளகாய் வந்துள்ளது. ஆனால் அதில் பெல் பெப்பர் என்னும் குடை மிளகாயில் தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் குடைமிளகாயை சமைக்கும் போது, அதிலுள்ள விதையை தூக்கிப் போட்டுவிட்டு, அதன் சதையை மட்டும் தான் சமைப்பார்கள். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனெனில் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். ஏனெனில் அந்த விதையில் வயதான தோற்றத்தை தடுக்கும் லைகோபைன் என்னும் பொருள் உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் இளமையோடு காட்சியளிக்கலாம்.

பப்பாளி விதைகள்

அனைவருக்கும் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அதன் விதைகளில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது தெரியாது. எப்படி பப்பாளியின் சதையில் நிறைய சத்துக்கள் உள்ளதோ, அதேப் போல் அதன் விதைகளிலும் உள்ளது. பப்பாளியின் விதைகளை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது. அதிலும் வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு ஸ்பூன் பாப்பாளியின் விதையை சாப்பிட்டால் சரியாகிவிடும். வேண்டுமென்றால் அதனை காய வைத்து, உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கு மட்டும் இது நல்லதல்ல, அழகிற்கும் தான் நல்லது. வேண்டுமென்றால் அதனை ஃபேஸ் பேக்கிற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக மின்னும்.

மாதுளை விதைகள்

இனிமையான சுவையைக் கொண்ட மாதுளை பழம் முழுவதுமே விதைகளால் மட்டும் தான் நிரம்பியுள்ளது. இதனை யாரும் தூக்கிப் போடமாட்டார்கள். ஆனால் அதன் சிறப்பான பலனை பற்றி சிலருக்கு தெரியாது. சிலர் அதன் ஜூஸை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விதையை துப்பிவிடுவார்கள். ஆனால் அதன் விதையை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டால், உடல் எடை ஈஸியாக குறையும். அதனை ஒரு ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். மாதுளையில் இருக்கும் பைட்டோகெமிக்கலில், கேன்சர், டியூமர், இதய நோய் போன்றவற்றை தடுக்கும் பாலிஃபீனால் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டு, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

English summary

Healthy Vegetable & Fruit Seeds | காய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப் போடாதீங்க...

When we cut the vegetables, we throw the seeds thinking that they are not healthy. Knowingly or unknowingly or knowingly commit a mistake by throwing the healthy vegetables seeds. There are many vegetables whose seeds can be very beneficial for our health. Here are few vegetables and fruit seeds that have multiple health benefits. So, next time while cutting these vegetables and fruits, be sure you eat the seeds too.
 
Desktop Bottom Promotion