For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த மூன்று நாட்களின் அவஸ்தையை தவிர்க்கணுமா? காபி டீ குடிக்காதீங்க!

By Mayura Akilan
|

பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் பிரச்சினை என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தலைவலி, மனஅழுத்தம், கை கால் வலி என அந்த மூன்று நாட்களும் துவண்டு போய்விடுவார்கள். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்களுக்குத்தான் டென்சன் அதிகம்.

ஆரோக்கியமாக உள்ள பெண்களுக்கு சராசரியாக 28 நாட்களில் மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். இதன்படி வருடத்திற்கு 13 முறை பீரியட்ஸ் டைம் ஏற்படவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். மாதசுழற்சி வருவதற்கு முன்பாகவே சிலருக்கு உடல்வலி, மார்பகவலி, எரிச்சல் ஆரம்பித்துவிடும். சிலருக்கு தலைவலியும் அதிகரித்துவிடும். இதுபோன்ற நாட்களில் ஏற்படும் வலிகளை சரியான சத்துணவுகளை உண்பதன் மூலம் சமாளிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

மாதவிலக்கு நாட்களில் காபி, டீ போன்ற பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம். ஏனெனில் காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும், மனஅழுத்தத்தையும் அந்த நாட்களில் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Getting Relief from Menstrual Cramps | அந்த மூன்று நாட்களின் அவஸ்தையை தவிர்க்கணுமா? காபி டீ குடிக்காதீங்க!

Many women experience menstrual cramps with their monthly period and figuring out how to manage them can be challenging. Many women experience menstrual cramps with their monthly period and figuring out how to manage them can be challenging.
Story first published: Thursday, November 22, 2012, 11:06 [IST]
Desktop Bottom Promotion