For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீன் சாப்பிட்டா கண்நோய் வராதாம்: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Eating fish helps prevent eye disease later in life
மீன் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்நோய்கள் எட்டிப்பார்க்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மீன் எண்ணெயில் டிஹெச்ஏ அதிகம் காணப்படுகிறது. இது ரெக்டினாவை பாதுகாக்கிறது. மேலும் மீனில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், சி, இ, வைட்டமின்கள், பீட்டா கரோட்டீன், மற்றும் துத்தநாகம் போன்றவை கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.

பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வின்போது பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.

ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்த குறைப்பாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜுன் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Eating fish helps prevent eye disease later in life | மீன் சாப்பிட்டா கண்நோய் வராதாம்: ஆய்வில் தகவல்

A study that recently appeared in the journal Ophthalmology has found that people who eat fatty fish at least once a week are less likely to develop age-related macular degeneration (AMD), an eye disease that gradually causes vision impairment and blindness in senior adults. The study findings add to the growing list of health benefits gained by eating fish rich in omega-3 fatty acids.
Story first published: Friday, July 13, 2012, 12:10 [IST]
Desktop Bottom Promotion