For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் கேன்சர் வராது!

By Maha
|

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த பழங்களில் ஒன்று ஸ்ட்ராபெர்ரி. ஸ்ட்ராபெர்ரி என்றால் நம் நினைவுக்கு வருவது நம் கண்களை கவரும் அழகும், சுகந்த மணமும், கருஞ்சிவப்பு நிறமும் ஆகும். இவை கோடைகாலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் தற்போது ஸ்ட்ராபெர்ரி சீசன் ஆரம்பித்துவிட்டதால், முடிந்த அளவு அதிக அளவில் வாங்கி சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இந்த பழத்தின் சீசன் என்பதால், ஸ்ட்ராபெர்ரி மற்ற நாட்களை விட, இந்த சீசனில் விலை மலிவாக கிடைக்கும்.

Benefits Of Strawberries

ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் என்ன பயன்?

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், ஃபோலிக் ஆசிட், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், காப்பர், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

அதுமட்டுமின்றி, இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. பொதுவாக இந்த தன்மை சிவப்பு நிற பழங்களில் அதிகம் இருக்கும்.

இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகம் உற்பத்தி செய்கின்றது.

ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் உள்ள அமிலங்கள், பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும் தன்மை உடையது.

English summary

Benefits of strawberries | ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் கேன்சர் வராது!

Strawberries are a great option as they are rich in vitamins and minerals, low in calories. They are full of antioxidants. Strawberries are perfect for curbing cardiovascular disease, cancer. Strawberries can also be used to whiten your teeth.
Desktop Bottom Promotion