For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெரியுமா?

By Maha
|

Cardamom
சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். மேலும் சிலர் அந்த ஏலக்காய் பிடிக்காது என்பதற்காக அதனை சேர்க்காமல் இருப்பர். ஏனெனில் மசாலா பொருளான ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் என்ன பயன் என்பது அவர்களுக்கு தெரியவில்வை மற்றும் பலருக்கும் தெரியாது. ஆகவே அதன் உண்மையான மருத்துவ குணம் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* ஏலக்காய் ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.

* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* இந்தியாவில் சில இடங்களில் ஏலக்காய் பொடி மற்றும் சந்தனப் பொடியை பேஸ்ட் போல் செய்து, தலை வலிக்கும் போது தடவுவார்கள். மேலும் சிலர் குடிக்கும் டீ-யில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இதனாலும் தலை வலி குறைந்துவிடும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெற முடியும். ஆகவே இனிமேலாவது ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழலாம்.

English summary

amazing health benefits of cardamom | ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெரியுமா?

Cardamom has many benefits in the kitchen. As an aromatic spice, it is one of the most useful flavours to add in various cuisines. In India, it is an integral part of the mixed spice called 'Garam Masala' that is used more or less in all Indian curries. However, most of us do not know the health benefits of this spice.
Story first published: Thursday, August 2, 2012, 12:08 [IST]
Desktop Bottom Promotion