For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க...

By Maha
|

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படும்.

மேலும் அலுவலகத்தில் அதிக வேலையின் காரணமாக மனஅழுத்தம், டென்சன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். சொல்லப்போனால், இந்த சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மேலும் இந்த சூரிய நமஸ்காரம் செய்யும் போது மனதிற்குள் "ஓம்" என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். இப்போது அந்த சூரிய நமஸ்காரத்தில் உள்ள பன்னிரெண்டு நிலையான ஆசனங்களை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.

முக்கியமாக இந்த சூரிய நமஸ்காரத்தில் நாம் செய்யும் ஆசனங்கள் அனைத்தும் சுவாசம் சம்பந்தப்படது. மேலும் இந்த பன்னிரெண்டு நிலையை செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தவே, மனதிற்குள் "ஓம்" என்னும் மந்திரத்தை சொல்கிறோம். மேலும் இந்த பன்னிரெண்டு நிலையில், செய்ததையே செய்தது போன்று இருக்கும். ஆனால் அதுவே இந்த சூரிய நமஸ்காரத்தின் சரியான முறை. இதனால் உடல் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு வளைந்து, ஒரு விதமான புத்துணர்ச்சியை அடையும். ஆகவே நண்பர்களே! நீங்களும் இந்த ஆசனத்தை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராணமாசனம்

பிராணமாசனம்

இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து நேராக நிமிர்ந்து நின்று, கைகளை பக்கவாட்டில் இருந்து மெதுவாக தலைக்கு மேலே தூக்கி இணைக்கும் போது மூச்சை உள்ளிழுத்து, பின் மெதுவாக மார்புக்கு நேராக கொண்டு வந்து, நமஸ்காரம் செய்வது போன்று வரும் போது மூச்சை நன்கு வெளியிட வேண்டும்.

அஸ்ட உட்டனாசனம்

அஸ்ட உட்டனாசனம்

இந்த ஆசனத்தின் போது மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேலே தூக்கி, கைகள் இரண்டும் காதுகளை தொடும் படியாக கும்பிட்டு, மெதுவாக பின்புறமாக உடலை வளைக்க வேண்டும்.

அஸ்டபாதாசனம்

அஸ்டபாதாசனம்

இதில் மூச்சை மெதுவாக வெளியே விடும் படியாக, கைகள் இரண்டும் தரையை தொடும் படியும், தலை கால்களின் முட்டியை தொட்ட படி, சில விநாடிகள் இருக்க வேண்டும்.

ஏகபாதபிரஸர்நாசனம்

ஏகபாதபிரஸர்நாசனம்

மூச்சை உள்ளிழுத்த படியாக, வலது காலை பின்னோக்கி வைத்து, இடது காலை முன்னோக்கி வைத்து, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை மேலே தூக்கி, சில விநாடிகள் இருக்க வேண்டும்.

தந்தாசனம்

தந்தாசனம்

இதில் மூச்சை வெளிவிட்ட படி, இரண்டு கால்களையும் பின்னே வைத்து, இரண்டு கைகளையும் முன்னே வைத்து, இடுப்பை மேலே தூக்கி, வளைந்து இருக்க வேண்டும்.

அஷ்டாங்க நமஸ்காரம்

அஷ்டாங்க நமஸ்காரம்

இந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து, தரையில் படுத்து, கைகளை மார்புக்கு நேராக ஊன்றி, கால்கள், முட்டி, மார்பு மற்றும் தாடை தரையில் படும் படியும், இடுப்பு பகுதி மட்டும் சற்று மேலே தூக்கியும் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சற்று நேரம் மூச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

இந்த நிலை ஆசனத்தில் மூச்சை உள்ளிழுத்த படியாக, தரையில் படுத்து, கைகளை மார்புக்கு நேராக வைத்து, மார்பு மற்றும் முகத்தை மேலே தூக்கி, முதுகை எவ்வளவு வளைக்க முடியுமோ, அவ்வளவு வளைக்க வேண்டும்.

அதோ முக்கா ஸ்வானாசனம்

அதோ முக்கா ஸ்வானாசனம்

இதில் மூச்சை வெளியே விட்டபடியாக, கைகளை தரையில் பதித்து, இடுப்பு மற்றும் தலையை உயர்த்தி, வளைந்து இருக்க வேண்டும்.

ஆஷ்வா சஞ்சலனாசனம்

ஆஷ்வா சஞ்சலனாசனம்

மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, வலது காலை முன்னே வைத்து, முட்டியை மடக்கி, கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் நேராக வைத்து, தலையை மேலேத் தூக்கி உடலை வளைக்க வேண்டும்.

உட்டனாசனம்

உட்டனாசனம்

மூச்சை வெளியே விட்ட படி, கால்களை இணைத்து, கைகள் தரையையும், தலை முட்டியையும் தொடும் படி செய்ய வேண்டும்.

அஸ்ட உட்டனாசனம்

அஸ்ட உட்டனாசனம்

இந்த நிலை இரண்டாவதாக கூறிய நிலையே ஆகும். அதாவது மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேலே தூக்கி, கைகள் இரண்டும் காதுகளை தொடும் படியாக கும்பிட்டு, மெதுவாக பின்புறமாக உடலை வளைக்க வேண்டும் என்பதே.

பிராணமாசனம்

பிராணமாசனம்

இந்த நிலையே சூரிய நமஸ்காரத்தின் இறுதி நிலை. இது சூரிய நமஸ்காரத்தை எவ்வாறு தொடங்குகின்றோமோ, அதே நிலையில் நமஸ்காரம் செய்து முடிக்க வேண்டும். இது செய்யும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 posture of surya namaskar

Suryanamaskar have a host of health benefits. Suryanamaskar give you good structured body and also does wonders for your mental and emotional health.
Desktop Bottom Promotion