For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி தூக்கத்தில் விழிப்பது இவ்வளவு பெரிய பிரச்சனையை உண்டாக்குமா?

இங்கே ஒழுங்கற்ற தூக்கதிற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

அதிகப்படியான மக்கள் இரவு தூங்கினால், காலையில் தான் விழிக்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற தூக்க பிரச்சனை கொண்டவர்கள் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கின்றனர். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்) ஆனது, இந்த நிலை மிகவும் அசாதாரணமானது என்று கூறுகிறது.

ஒழுங்கற்ற தூக்க அறிகுறி கொண்டவர்கள் ஒன்றிலிருந்து நான்கு நேரம் வரை மட்டுமே தொடர்ச்சியாக தூங்குகின்றனர். ஆனால் அவர்கள் 24 மணி நேரத்தில் பகுதி பகுதியாக தூங்குவதால், நன்றாக தான் தூங்குகிறோம் என நினைத்துக்கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாதாரண தூக்கம்

சாதாரண தூக்கம்

ஒழுங்கற்ற தூக்க முறையை புரிந்து கொள்வதற்கு, முதலில் சாதாரண தூக்க முறை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நமது உடலில் இரவு பகலை அடிப்படையாக கொண்டு 24 மணி நேர கடிகாரம் செயல்படுகிறது. இது தூக்க அலை சுழற்சிகளை கட்டுப்படுத்துகிறது.

மெலடோனின் என்ற மூளை உருவாக்கும் ஹார்மோன் உங்களை சோர்வாக உணர வைக்கும். இந்த ஹார்மோன் இரவில் அதிக அளவில் இருட்டாக இருக்கும் போது செயல்படுகிறது. இது ஒழுங்கான தூக்கத்திற்கு அவசியமாகிறது.

ஒழுங்கற்ற தூக்க நோய்க்குரிய காரணங்கள்

ஒழுங்கற்ற தூக்க நோய்க்குரிய காரணங்கள்

நீங்கள் தினசரி திட்டமிட்ட கால அளவுகளில் தூங்கவில்லை என்றால் இது ஒழுங்கற்ற தூக்க நோய் உருவாகும் அபாயத்தை உங்களுக்கு தருகிறது.

ஒழுங்கற்ற தூக்க நோய் வயது அதிகரிக்கும் போது அதிகரிக்கரிக்கிறது. ஆனால் இதற்கு வயது அதிகரிப்பது மட்டும் முக்கிய காரணம் என்று சொல்லிவிட முடியாது. வயது தொடர்பான மருத்துவ, நரம்பியல், மற்றும் மனநல குறைபாடுகள் ஆகியவை இதற்கு காரணமாகின்றன.

இரவு பகல் என மாறி மாறி வேலை செய்பவர்கள், அடிக்கடி காலநிலை மாற்றம் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மருத்துவ சிகிச்சை அவசியமா?

மருத்துவ சிகிச்சை அவசியமா?

குறைந்த நாட்கள் மட்டுமே இருக்கும் ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் விழிப்பிற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படாது. எப்போதாவது தூங்குவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இருப்பினும் நீங்கள் தூங்குவதில் அதிக சிரமத்தை உணர்ந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

ஒழுங்கற்ற தூக்கமுறையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

ஒழுங்கற்ற தூக்கமுறையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

தூக்கமுறை ஒழுங்குபடுத்த சுலபமான வழிகள் இல்லை. ஆனால் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் இதற்கு உதவும்.

கணினி, தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றில் இருந்து வரும் நீல நிற ஒளி கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இரவு நேரங்களில் இவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மெலடோனின் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்.

தூங்குவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, உடல்பயிற்சி செய்வதற்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.

தூங்கும் இடம் வசதியாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.

தூங்கும் போது அமைதியான சூழ்நிலையில் தூங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is irregular sleep wake syndrome

here are the irregular sleep wake syndrome and treatments
Story first published: Saturday, May 13, 2017, 11:52 [IST]
Desktop Bottom Promotion