For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஷப் பாம்பு, தேள் கடித்தால், உடனே இதை செய்தால் விஷம் ஏறாமல் தடுக்க முடியும்!

விஷத்தன்மையான மிருகங்கள் பூச்சிகள் கடித்தால், அந்த விஷம் உடலில் சீக்கிரம் ஏறாமல் தடுக்க உதவும் டிப்ஸ்!

|

நகர் புறங்களை காட்டிலும், கிராம புறங்களில் தான் விஷப் பூச்சி கடி அதிகம் காணப்படும் என கூறுவதுண்டு. ஆனால், மழை காலத்தில் நகர் புறங்களில் கூட விஷப் பூச்சிகள் அதிகரித்து காணப்படும்.

முக்கியமாக பாம்பி, தேள், வெறிநாய் போன்றவை கடித்தால் நமது ஆரோக்கியத்தில் தீய தாக்கம் பலவன ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, விஷப் பூச்சி கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாம்பு கடிதத்தை எப்படி கண்டறிவது?

பாம்பு கடிதத்தை எப்படி கண்டறிவது?

ஒருவேளை ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் அல்லது வயல் காட்டில் நடந்துக் கொண்டிருக்கும் நமக்கே தெரியாமல் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த வகையிலான பாம்பு என்பதையும் நாம் ஒரு சிறு வழிமுறை மூலம் கண்டுப்பிடிக்கலாம்.

பாம்பு கடித்தவர்களுக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியுடைய வேரினை கொடுத்து சுவைக்க சொன்னால் போதும்...

சுவைகளும் - பாம்பு வகைகளும்!

சுவைகளும் - பாம்பு வகைகளும்!

இனிப்பு சுவையாக இருந்தால் - நல்ல பாம்பு!

புளிப்புச் சுவையாக இருந்தால், விரியன் பாம்பு!

வாய் வழவழப்பாக இருந்தால், வழலைப்பாம்பு, நீர் பிரட்டை!

கசப்புச் சுவையாக இருந்தால், வேறு பூச்சிகள்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

ஒரு நபரை பாம்பு கடித்துவிட்டால் உடனே வாழைப்பட்டை உரித்து அதில் பாதிக்கப்பட்ட அந்த நபரை படுக்க வைக்க வேண்டும். பிறகு வாழைப்பட்டை சாற்றை ஒரு லிட்டர் அளவு பிழிந்து வாயில் ஊற்ற வேண்டும். அதை முழுவதுமாக பாம்பு கடித்த நபரை குடிக்க செய்ய வேண்டும்.

தேள் கடி மருந்து - #1

தேள் கடி மருந்து - #1

எலுமிச்சை பழத்தின் விதைகளை உப்புடன் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் தேள் கடித்த விஷம் இறங்கி விடும்.

தேள் கடி மருந்து - #2

தேள் கடி மருந்து - #2

எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேள் கடி மருந்து - #3

தேள் கடி மருந்து - #3

ஒரு கல்லில் சில துளி நீர் தெளித்து அதில் புளியங்கொட்டை தேய்த்து அதன் சூட்டுடன் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் அதன் விஷயம் இறங்கியதும் புளியங்கொட்டை கீழே விழுந்துவிடும் என இயற்கை மருத்துவ குறிப்புகளில் கூறப்படுகிறது.

தேள் கடி மருந்து - #4

தேள் கடி மருந்து - #4

கொஞ்சம் நாட்டு வெல்லத்துடன், கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலை சேர்த்து நன்றாக கலந்து பிசைத்து தேள் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் குறையும்.

தேள் கடி மருந்து - #5

தேள் கடி மருந்து - #5

குப்பை மேனி இலையை நீரில் கழுவி, கசக்கி சாறு எடுத்து, அந்த இலையுடன் சேர்த்து தேள் கடித்த இடத்தில் தடவி, இறுக்கி கடிவாயில் கட்டினால் தேள் விஷம் இறங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Useful Medical Tips for Poisonous Snake Bite and Scorpion Bite!

Useful Medical Tips for Poisonous Snake Bite and Scorpion Bite!
Story first published: Tuesday, April 18, 2017, 11:46 [IST]
Desktop Bottom Promotion