வலி நிவாரண மாத்திரைகளால் மாரடைப்பு ஏற்படுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

வலி நிவாரண மாத்திரைகளின் தினசரி பயன்பாடனது, மாரடைப்பு தாக்குதலின் அபாயத்திற்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் வரையில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், மாரடைப்பு வருவதற்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய பாதிப்பு

இதய பாதிப்பு

ஸ்டெராய்டல் அல்லாத ( non-steroidal) அழற்சிக்குரிய மருந்துகள் (NSAID) வலி மற்றும் அழற்சி மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, இதய பாதிப்பு அளவை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

பி.ஜே.ஜே பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், NSAID -களான ஐபூபுரூஃபன், டிக்லோஃபெனாக், செலிகோக்ஸிப் மற்றும் நாப்ரோக்ஸன் போன்றவற்றை - ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு மேலாக எடுத்துக்கொள்வது மாரடைப்பு ஆபத்தோடு தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிக டோஸ்கள்

அதிக டோஸ்கள்

இந்த மருந்துகளை அதிக டோஸ்களாக தொடர்ந்து ஒரு மாதத்திற்கு எடுத்துக்கொள்வது முற்றிலும் ஆபத்திற்கு வழிவகுக்கிறது.

மாரடைப்பு

மாரடைப்பு

ஆராய்ச்சியாளர்களின் திட்டமிட்ட ஆய்வு மற்றும் ஒரு மெட்டா பகுப்பாய்வு ஆனது 446,763 மக்களில் 61,460 பேர் இந்த மருந்துகளின் தொடர் நுகர்வால் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

வலி நிவாரணிகளால் ஆபத்து

வலி நிவாரணிகளால் ஆபத்து

மிலானோ-பிக்கோஸ்கா பல்கலைக்கழகத்தின் முந்தைய ஆய்வின் படி, அதிகமாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மற்றும் தாமாகவே வாங்கி சாப்பிடும் பல வலி நிவாரண மருந்துகளால், அதிகப்படியானோர் இருதய மருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகள், NSAID-கள் அல்லது ஸ்டீராய்டல் அல்லாத, அழற்சிக்கான மருந்துகள் என அழைக்கப்படுகின்றன, இவற்றில் பல COX-2 தடுப்பான்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

பாதுகாப்பற்றது

பாதுகாப்பற்றது

வலி மற்றும் வீக்கத்தைத் தணிப்பதற்கு நம்மில பலர் இது போன்ற மருந்துகளை பயன்படுத்துகிறோம். மேலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவை குறைந்த பாதுகாப்புப் பரிசோதனைகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Painkillers Could Lead to Heart Attack Risk

it contains are painkillers are given a heart attack
Story first published: Wednesday, May 17, 2017, 17:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter