பல்வலியை போக்கும் டூத் பேஸ்ட் வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் வாங்க!!

இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பற்பசைகளை உபயோகிப்பதால் நமது உடலுக்கு எவ்வித தீமையும் ஏற்படாது. அதே நேரத்தில் குறைந்த செல்வில் பற்களும் பளிச்சிடும்.

By: Siva lingam
Subscribe to Boldsky

காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை பல் விளக்குதல். ஆனால் நாம் செய்யும் முதல் வேலையே நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேலையாக இருந்தால் என்ன செய்வது?

ஆம் தற்போது வெளிவரும் பெரும்பாலான பற்பசையில் கெமிக்கல் கலந்துள்ளதால் பற்களை வெள்ளையாக்குதல் என்ற நன்மையை விட அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம். கெமிக்கல் அதிகம் கலந்து பற்பசைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமது உடலின் ஆரோக்கியம் கெடுகிறது.

எனவே உடல் ஆரோக்கியமான பற்களும் பளிச்சிடும் வகையில் நாம் வீட்டிலேயே பற்பசைகளை தயார் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா - 3 கரண்டிகள்

வேப்ப இலை பவுடர் - 1 கரண்டி

தேங்காய் எண்ணெய - 3 கரண்டிகள்

ஜைலிட்டால் - 1 கரண்டி (சுவைக்காக)

மிண்ட் ஆயில் - 15 துளிகள் (வாசனைக்காக)

 

தயாரிக்கும் முறை:

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படி ஒவ்வொன்றாக கலந்தால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான பற்பசை. அதன்பின்னர் அதை ஒரு கண்ணாடி ஜாடியில் பத்திரப்படுத்தி வைக்கவும்.

உபயோகிக்கும் முறை :

இந்த பற்பசையை நார்மல் பற்பசையை போல நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்து பல் துலக்கவும். பற்கள், ஈறுகள் வலிமை பெறுவதுடன் பல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் அருகில் வராது. அப்புறம் என்ன சிக்கன், மட்டன் ஐஸ்க்ரீம் என நீங்கள் நினைத்த எல்லாவற்றையும் சங்கடமின்றி சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Natural homemade toothpaste to fight cavities

Natural homemade toothpaste to fight cavities
Please Wait while comments are loading...
Subscribe Newsletter