For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை இயற்கை வழியில் அதிகரிப்பது எப்படி?

இங்கு ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், உடலில் இரத்த ஓட்டமும் ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் சிறிது தடைப்பட்டாலும், அது உடலில் பல தீவிர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

How To Boost Blood Circulation Below Your Belt

உடலில் இரத்தம் தான் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வழங்குகிறது. குறிப்பாக தற்போதைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளை சந்திப்பதற்கு ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது தான். இதனால் தான் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஆண்கள் அதிகம் சந்திக்க நேரிடுகிறது.

சரி, இப்போது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை இயற்கை வழியில் அதிகரிப்பது எப்படி என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

தினமும் ஆண்கள் ரன்னிங் போன்ற உடற்பயிற்சியை செய்து வந்தால், இதயம் மட்டுமின்றி, பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சியினால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, பாலியல் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் தவறாமல் சிறிது தூரம் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

வழி #2

வழி #2

பூண்டு உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். வெங்காயமும் கூட தான். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மிளகாய் மற்றும் மிளகு போன்றவை அழற்சியைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். வாரத்திற்கு 2 முறை மீனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.

வழி #3

வழி #3

அதிகப்படியான மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் போன்றவை உடலில் மட்டுமின்றி அந்தரங்க உறுப்புகளிலும் இரத்த ஓட்டத்தை தடை செய்யும். மன அழுத்தத்தைக் குறைக்க சிகரெட் மற்றும் மது போன்றவற்றை எடுக்கும் போது, அது பாலியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். எனவே இப்பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

வழி #4

வழி #4

அவ்வப்போது இடுப்புக்கு கீழே உள்ள பகுதியை மசாஜ் செய்வதன் மூலம், உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, அப்பகுதியில் இரத்த ஓட்டமும் ஊக்குவிக்கப்படும்.

வழி #5

வழி #5

மூலிகைகளான ஜின்செங் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்யும். அதேப் போல் கின்கோ என்னும் மூலிகை இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். ஆனால் இவற்றை உட்கொள்ளும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.

வழி #6

வழி #6

கீகல் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இடுப்பு பகுதியை வலிமைப்படுத்தும் கீகல் உடற்பயிற்சியை செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் தூண்டப்படுவதோடு, இடுப்புக்கு கீழே உள்ள தசைகள் வலிமைப்படுத்தப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Boost Blood Circulation Below Your Belt

Your privates need proper blood flow to be able to keep you happy when you are with your partner. So, how to send more blood to your privates? Read on...
Story first published: Monday, March 20, 2017, 10:05 [IST]
Desktop Bottom Promotion