அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், வயிற்றின் அளவை குறைப்பது எப்படி? 6 வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

லிபோசக்ஷன் என்ற ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது. இதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்பை நீக்கி, வேகமாக ஸ்லிம்மாக முடியும். நடிகர் அஜித்தில் (பரமசிவன் திரைப்படத்தின் காலத்தில்) இருந்து நடிகை நயன்தாரா வரை இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டதாக ஒரு தகவலும் இருக்கிறது.

How To Reduce Your Stomach Naturally And Without Surgery!

Image Source

இது சரியான தீர்வு அல்ல. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு பக்கவிளைவுகளால் உயிரிழந்தவர்களும் இருக்கின்றனர். எனவே, வயிற்றின் அளவை குறைக்க இயற்கையான முறையை பின்பற்றுவது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

நிறைய பேர் உடல் எடை குறைக்க முயற்சித்து, அதில் தோல்வி அடைய காரணம் அவர்களிடம் இருக்கும் குறைந்த மன தைரியம் மற்றும் ஊக்கம் தான்.

வேகமாக குறைக்க வேண்டும் என விரும்புவார்கள். ஓரிரு மாதங்கள் கூட தொடர்ந்து முயற்சி செய்யாமல் சேர்ந்து விடுவார்கள்.

மேலும், உடல் எடை குறைக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்!

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த கற்க வேண்டும். அய்யோ முடியவில்லையே, கடைசி வரை இப்படியே தான் இருப்போமா? என பதட்டம் அடைவதை நிறுத்த வேண்டும்.

சிலர் பட்டினி எல்லாம் இருப்பார்கள். இது நிச்சயம் உடல் எடை குறைக்க பயனளிக்காது. நாளின் முடிவில் நீங்கள் அதிகமாக தான் உணவு உட்கொள்வீர்கள்.

நார்ச்சத்து!

நார்ச்சத்து!

நார்ச்சத்து தான் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட ஊட்டச்சத்து. இது செரிமானத்தை சரி செய்யும் பண்பும் கொண்டுள்ளது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை போக்க இது வெகுவாக உதவுகிறது. எனவே, உடல் எடை குறைக்க, இயற்கையாக வயிற்றின் அளவை சிறிதாக்க இது பயனளிக்கும்.

கொழுப்பும், உப்பும்!

கொழுப்பும், உப்பும்!

உணவு ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக கொழுப்பும், உப்பும் அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இது தான் உங்கள் ஆரோக்கியத்தை அழித்து, உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. இந்த வகை உணவுகளில் கலோரிகள் அதிகம்.

தண்ணீர்!

தண்ணீர்!

உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் சிறந்த பானம் நீர். இது உங்கள் பசியையும் கட்டுப்படுத்தும். உணவருந்தும் 15 நிமிடத்திற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். அதே போல உணவருந்திய ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்.

நொறுக்கு தீனிகள்!

நொறுக்கு தீனிகள்!

நொறுக்கு தீனிகளுக்கு குட் பை கூறமால் இயற்கையாக வயிற்றின் அளவை குறைக்க முடியாது. நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக வேக வைத்த காய்கறிகள், ஃப்ரஷ்ஷான பழங்கள் உண்ணுங்கள்.

காலை உணவு!

காலை உணவு!

வயிற்றின் அளவை குறைக்கிறேன் என காலை உணவை தவிர்ப்பது மிகபெரிய தவறு. இது மதிய உணவின் போது பசியை அதிகரித்து உடல் எடை கூட தான் செய்யும்.

எனவே, காலை உணவை சத்து மிகுந்த உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். பால், முட்டை, காய்கறிகள், பழங்கள் என புரதம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Reduce Your Stomach Naturally And Without Surgery!

How To Reduce Your Stomach Naturally And Without Surgery!
Story first published: Thursday, February 23, 2017, 12:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter