நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள்!

இங்கு நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நிறைய பேருக்கு மறதி அதிகரித்துவிட்டது. மேலும் மூளை நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் உள்ளது. இப்பிரச்சனைக்கு கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்த்து, நம் முன்னோர்கள் பின்பற்றிய சில வைத்தியங்களை மேற்கொண்டால், மூளையின் செயல்பாடு தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரித்து, மூளை நரம்பும் பலம் பெறும்.

Granny Remedies To Improve Memory Power

இங்கு ஒருவரது நினைவாற்றலை அதிகரிக்க உதவும் நம் பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் மூளையின் ஆரோக்கியம் மேம்பட்டு, நினைவாற்றலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைத்தியம் #1

வைத்தியம் #1

வில்வ பழத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர, மறதி நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

இலந்தை பழத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து கலந்து சாப்பிட, மூளையின் செயல்பாடு மேம்பட்டு, நினைவாற்றலும் அதிகரிக்கும்.

வைத்தியம் #3

வைத்தியம் #3

தினமும் காலையில் 10 கருஞ்சீரகத்தை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆனால் இந்த கருஞ்சீரகத்தை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது.

வைத்தியம் #4

வைத்தியம் #4

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி வல்லாரைக் கீரையை பொரியல் செய்து கொடுத்து வந்தால், நினைவாற்றல் அதிகரித்து, மிகவும் புத்திசாலியாக திகழ்வார்கள்.

வைத்தியம் #5

வைத்தியம் #5

கரிசலாங்கண்ணி வேரின் சாறு மற்றும் நாயுருவி வேரின் சாற்றினை ஒன்றாக கலந்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட மூளை சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny Remedies To Improve Memory Power

Here are some granny remedies to improve memory power. Read on to know more...
Story first published: Tuesday, January 10, 2017, 15:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter