For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்...!

கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நீல நிற ஒளி பற்றியும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

காலையில் அலாரம் அடித்ததும் அதை அணைத்துவிட்டு பின் சிறிது நேரம் சமூக வலைதளங்கள் மற்றும் இ மெயிலை பார்க்கிறோம். பின்னர் 8 மணி நேரம் தொடர்ந்து கணினியில் மூழ்கிவிடுகிறோம். பின்னர் இரவு சிறிது நேரம் முக்கிய டிவி நிகழ்ச்சிகளை பார்க்கிறோம். இப்போது உங்கள் கண்கள் என்னவாகிறது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற ஒளி

நீல நிற ஒளி

நம்மில் பலர் நீண்ட நேரம் மின்னனு திரைகளை பார்ப்பதில் செலவிடுகிறோம். நீல்சன் நிறுவனத்தின் பார்வையாளர்கள் அறிக்கையானது அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 8 நேரம் 47 நிமிடங்களை மின்னனு ஊடகங்களை பார்ப்பதில் செலவிடுவதாக கூறுகிறது. இவ்வாறு செய்வது உங்கள் கண்களுக்கு நல்லதா?

நிச்சயமாக இல்லை..! சில டாக்டர்கள் மின்னனு சாதனங்களின் திரையில் இருந்து வரும் நீல நிற ஒளி கண்களை பாதிக்கும் என கூறுகின்றனர். மேலும் சில விஞ்ஞானிகள் இது விழித்திரை சேதத்தை உண்டாக்கும் என கூறுகின்றனர்.

கண்கள் என்னவாகும்?

கண்கள் என்னவாகும்?

இன்றைய டிஜிட்டல் மயமாதலால், மிக நீண்ட நேரம் நாம் மின்னனு சாதனங்களுடன் செலவிடுகிறோம். இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளாவன, வித்திரைகளில் சேதம், சோர்வடைந்த கண்கள், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல், சிவப்பு நிற கண்கள், உலர்ந்த கண்கள் மற்றும் தலைவலி.

கணினி மற்றும் செல்போன் போன்ற சாதனங்களில் இருந்து வரும் நீல நிற ஒளியிலிருந்து இருந்து நமது கண்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என காண்போம்.

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு பிறகும், 20 விநாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். 20 அடிகள் தொலைவில் உள்ள பொருட்களை பாருங்கள். எனவே நீங்கள் 20/20/20 என்ற மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதனை பழக்கமாக்கி கொள்ள உங்களது கணினி மற்றும் செல்போனில் ரிமைண்டரை செட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும், நீங்கள் கணினி அல்லது செல்போனில் அதீத கவனத்தை செலுத்துவதால், கண்களை சிமிட்டாமல் போகிறீர்கள். எனவே 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சில முறை கண்களை சிமிட்டுவது அவசியம்.

ஒளியை கட்டுப்படுத்தும் ஆப் (light-reducing app)

ஒளியை கட்டுப்படுத்தும் ஆப் (light-reducing app)

f.lux போன்ற பல ஒளியை கட்டுப்படுத்தும் ஆப்கள் உள்ளன. உங்களது ஐபோனை "Nightshift" மோடிலும் இயக்கலாம்.

இருப்பினும் தூங்குவதுற்கு சில மணி நேரம் முன்பு செல்போன், கணினி,டிவி ஆகியவற்றை பார்க்காமல் இருப்பது நல்லது.

ஸ்மார்ட் லென்ஸ்களை பயன்படுத்தலாம்

ஸ்மார்ட் லென்ஸ்களை பயன்படுத்தலாம்

ப்ளூபிலாக்கர் (BluBlocker) போன்ற கண்கண்ணாடிகள் கணினி மற்றும் செல்போன் திரையில் இருந்து வரும் நீல நிற ஒளியை கட்டுப்படுத்தும். இவற்றை அணிவதால் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

ரீடிங் கிளாஸ்கள் இவற்றில் இருந்து வேறுபட்டவை. அவை குறைந்த அளவு ஒளியை மட்டுமே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. ஏனெனில் அவை புத்தகங்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. நீங்கள் ரீடிங் கிளாஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் செல்போன் மற்றும் கணினியில் இருந்து சற்று இடைவெளிவிட்டு பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

eye health blue light eye care

eye health blue light eye care
Story first published: Wednesday, May 10, 2017, 9:21 [IST]
Desktop Bottom Promotion