For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் மூட்டு வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க...

இங்கு எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

|

தினந்தோறும் மூட்டு வலியை சந்தித்தால், நமக்கே நம்மீது வெறுப்பு வந்துவிடும். ஆகவே மூட்டு வலியில் இருந்து விடுபட வேண்டுமானால், எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தின் மீது சற்று அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகள் உள்ளன.

Do These Things If You Want Healthy Bone Joints

உடலின் சீரான இயக்கத்திற்கு எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியம் அவசியம் என்பதால், ஒவ்வொருவரும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டியது இன்றியமையாதது. இங்கு எலும்பு மூட்டுக்களின் ஆரோக்கியம் மேம்பட ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். உடல் எடை ஒருவரின் உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாவிட்டால், மூட்டுக்களில் அழுத்தம் அதிகரிக்கும். ஆகவே சரியான உடல் எடையைப் பராமரியுங்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் செரிமான மண்டலத்தில் ஏற்படும் நாள்பட்ட அழற்சிகள், எலும்பு மூட்டு பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். எனவே அவ்வப்போது மருத்துவரை சந்தித்து வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுங்கள். குறிப்பாக கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

தினமும் தவறாமல் குறைந்தது 1 டம்ளர் பாலைக் குடிக்க வேண்டியது அவசியம். பாலில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு தினமும் சரியான அளவில் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், மூட்டுக்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

ஆரோக்கியமான எலும்பு மூட்டுகள் வேண்டுமானால், தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். குறிப்பாக சைக்கிளிங், நீச்சல் போன்ற மூட்டுக்களைப் பாதிக்காத பயிற்சிகளை செய்வது நல்லது.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவராயின், பயிற்சியாளரின் உதவி மற்றும் பரிந்துரையின் பேரில் உடற்பயிற்சியை செய்யுங்கள். ஏனெனில் அளவுக்கு அதிகமான எடையைத் தூக்கினால், அதுவே மூட்டுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

ஏற்கனவே மூட்டுக்களில் வலி அல்லது காயங்கள் இருந்தால், அது முற்றிலும் குணமாகும் வர கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do These Things If You Want Healthy Bone Joints

If you neglect the health of your bones, you may also be prone to serious disorders like bone cancer!
Story first published: Friday, February 24, 2017, 16:43 [IST]
Desktop Bottom Promotion