For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் அதிகமாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா?

இங்கு அதிகமாக தூங்கி கொண்டே இருப்பவர்களுக்கு உடல் எடையில் மாற்றம் ஏற்படுமா என்பதற்கான மருத்துவ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

|

நமது உடலில் ஒரு சில விஷயங்களில் தாக்கம் ஏற்பட்டால் அதனால் பல உடல்நல கோளாறுகள், ஆரோக்கிய பிரச்சனைகள் எழும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவும், தூக்கமின்மை, செரிமானம் போன்றவற்றை கூற முடியும்.

இதில், தூக்கமின்மை கோளாறு அல்லது அதிக நேரம் தூங்குவதால் உடல் பருமனில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை!

தூக்கமின்மை!

தூக்கமின்மை அல்லது உறக்க சுழற்சியில் தாக்கம் எற்படுள்ளவர்களுக்கு உடல் எடை கூடும். இது உடல் பருமன் அதிகரிக்க காரணியாக அமைகிறது என ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது உண்மை தான். மரபணு சார்ந்து கூட இந்த தாக்கம் உண்டாகலாம்.

பாரம்பரிய மரபணு தாக்கம்!

பாரம்பரிய மரபணு தாக்கம்!

குடும்ப வரலாற்றில் மரபணு காரணமாக கூட உடல் பருமன் தொடர்ந்து ஒருவருக்கு தாக்கத்தை உண்டாக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை உறக்க சுழற்சியில், உறங்கும் வேளைகளில் மாற்றங்கள் / தாக்கங்கள் ஏற்படும் போது இந்த மரபணு தூண்டப்பட்டு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளனவாம்.

நேரம் மாறுபடும்!

நேரம் மாறுபடும்!

அனைவருக்கும் ஒரே அளவிலான தூக்கம் போதுமானது என்பது தவறான கண்ணூட்டம். அவரவர் உடல்நிலை, வேலைகள் சார்ந்து ஒவ்வொருவருக்கும் தேவையான உறக்க நேரம் மாறுபடுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோம்பேறித்தனம்!

சோம்பேறித்தனம்!

ஒருவேளை சோம்பேறியாக, மந்தமான நபராக இருந்தால் உங்கள் வாழ்வியல் பழக்கமே உடல் எடை அதிகரிக்க காரணியாக அமையும். இதனால் தசைகளின் வலிமை குறையும். இது தானாகவே உடல் பருமன் அதிகரிக்க செய்யும்.

மருத்துவ பரிசோதனை!

மருத்துவ பரிசோதனை!

இன்று மல்டி டாஸ்கிங், ஷிப்ட் வேலைகள் காரணமாக பலரும் உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உடல்நல குறைபாடுகள் கண்டு வருகின்றனர். ஒருவேளை நீங்கள் இந்த கட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தால், உடனே மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டியவை!

தவிர்க்க வேண்டியவை!

தினமும், தியானம் செய்வது, யோகா செய்வது நல்ல உறக்கம் பெற உதவும். முடிந்த வரை நள்ளிரவு வரை அதிகம் மொபைல், லேப்டாப் பயன்படுத்த வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Too Much Sleep Make You Fat?

Can Too Much Sleep Make You Fat?
Story first published: Friday, January 6, 2017, 16:46 [IST]
Desktop Bottom Promotion