For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடிப்பது தொடர்பாக நிலவி வரும் தவறான கருத்துக்கள்!! உங்களுக்கு தெரியுமா?

மது அருந்துவதன் தொடர்பாக நிலவி வரும் பொய்யான தகவல்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கத்தை அழித்து சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.

ஆனால் நாம் நிறைய கேள்விப்படுகிறோம். குடித்தான் கொழுப்பு கரையும். சிறிதளவு குடிக்கலாம் தவறில்லை. என இன்னும் பலவிஷயங்களை பார்க்கிறோம். ஆனால் அவை எந்தளவிற்கு உண்மை என தெரியுமா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு - 1

தவறு - 1

தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இதனால் உடலில் கொழுப்பு கரைக்கப்படுகிறது. சிறிய அளவு என்றாலும் ஆல்கஹால் குடலின் மென்சுவர்களை புண்ணக்குகின்றன.

தினமும் தொடர்ந்து குடிக்கும்போது அவை கல்லீரலை பாதிக்கும். ஆகவே அளவென்பது கிடையாது. கெடுதல் கெடுதல்தான்.

தவறு - 2

தவறு - 2

ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது என்பது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

தவறு - 3

தவறு - 3

பீர் மற்றும் ஒயின் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. - இதுவும் தவறுதான் இவை உடல் பருமனை உண்டுபண்ணிவிடும். ஒயின் மற்றும் பியர் இரண்டுமே கெடுதல்தான்.

தவறு - 4

தவறு - 4

குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.- தவறு. தற்காலிகமாக மறக்கபடிப்படுவதுபோல் செய்து உங்கள் உடல் மற்றும் மன நில பாதிப்பை இருமடங்கு அதிகப்படுத்திவிடும். இதனால்தான் குடிக்கு அடிமையானவர்கள் பாதிபேர்.

தவறு - 5

தவறு - 5

குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.- இதுவும் தவறு. குடிப்பதால் உங்கள் மூளையில் மயக்க நிலை உண்டாகிறது. நரம்பு மண்டலங்கள் பலவீனப்படுகிறது. இதனால் நீங்கள் தூங்குகிறீர்கள். ஆனால் அது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தராது. மேலோட்டமான 6 மணி நேர தூக்கம் வெறும் 3 மணி நேர தூக்கத்திற்கே சமம்.

தவறு - 6

தவறு - 6

ஜலதோஷம் மற்றும் இருமலை குணப்படுத்தும். இது தவறு. ஜலதோஷம், இருமலை போக்கும் அளவிற்கு மதுவில் எந்த மருத்துவ பலனும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 common misconceptions about Alcohol

6 common misconceptions about Alcohol
Desktop Bottom Promotion