நாள் முழுக்க குஷ், குஷ்.. பிரச்சனையா? அப்ப இதப்படிங்க!

இங்கு நீங்கள் அதிகமாக வாயுத்தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

மிகவும் தர்மசங்கடமான பிரச்சனை வாயுத்தொல்லை. அடக்கினாலும் பிரச்சனை, வெளியிட்டாலும் பிரச்சனை. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்க விடும் பிரச்சனை இது. நால்வர் மத்தியில் ஒருவர் எளிதாக கேலிப்பொருளாக மாற இது மிகமுக்கிய காரணமாக அமைந்துவிடும்.

வாயு பிரச்சனை எல்லாருக்கும் தான் இருக்கிறது. ஆனால் சிலருக்கு மட்டும் தான் அது நாள் முழுக்க இருக்கும். ஏன், எதனால் சிலருக்கு நாள் முழுக்க வாயுத்தொல்லை ஏற்படுகிறது என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்பனேட் ட்ரிங்க்ஸ்!

கார்பனேட் ட்ரிங்க்ஸ்!

நீங்கள் அதிகமாக கார்பனேட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் போது, உடலுக்குள் காற்று அதிகரிக்கிறது. இது தான் ஏப்பமாகவும், வாயுவாகவும் அதிகமாக வெளிப்படுகிறது.

கலவையான காய்கறிகள்!

கலவையான காய்கறிகள்!

சில காய்கறிகளை கலவையாக சேர்த்து ஒரே வேளையில் சாப்பிடும் போதும் வாயுத்தொல்லை அதிகரிக்கலாம். முட்டைகோஸ், முளைக்கட்டியவை, போன்ற ஆரோக்கியமான உணவுகளை கலவையாக சாப்பிடும் போது கூட வாயுத்தொல்லை அதிகரிக்க கூடும்.

முள்ளங்கி!

முள்ளங்கி!

வாயுத்தொல்லை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது முள்ளங்கி. இது உடலில் வாயுவை அதிகரிக்க செய்யும். வாயுத்தொல்லையால் அவதிப்படும் நபர்கள் முள்ளங்கியை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

காற்றை விழுங்குதல்!

காற்றை விழுங்குதல்!

அனைத்திற்கும் மேலாக வாயுத்தொல்லை அதிகரிக்க முக்கிய காரணியாக இருப்பது காற்றை விழுங்குவது. சிலர் பேசும் போது, சாப்பிடும் போது நீர் பானங்கள் குடிக்கும் போது காற்றையும் சேர்த்து விழுங்குவார்கள். இதன் ஆளவு அதிகரித்து இரைப்பையில் காற்று கூடும் போது வாயுத்தொல்லை அதிகரிக்கும்.

செயற்கை சர்க்கரை!

செயற்கை சர்க்கரை!

செயற்கை சர்க்கரை எனப்படும், வெள்ளை சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது வாயுத்தொல்லை அதிகரிக்கும். முக்கியமாக ஐஸ்க்ரீம், சாக்லேட் போன்றவற்றை தினமும் உட்கொள்வோருக்கு வாயுத்தொல்லை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Are Farting Too Much

Reasons Why You Are Farting Too Much
Please Wait while comments are loading...
Subscribe Newsletter