For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை குறைக்க வேணுமா? இந்த யோகாவை செய்யுங்க!!

|

தொப்பை குறைப்பது பலபேருக்கு சாகசம். வெயிட் குறைஞ்சாலும் இந்த தொப்பை மட்டும் குறைய மாட்டேங்குதே என்று பலபேர் கலவலைப்படுவதுண்டு.

உடலின் மற்ற இடங்கள் போல் அல்ல வயிறு. மற்ற பாகங்களில் எலும்புகளின் மேல் சதை இருக்கும்.

ஆனால் வயிற்றுப் பகுதியில் எலும்பு இல்லாததால் அதிக கொழுப்பு செல்கள் தங்கி தொப்பையை ஏற்படுத்திவிடும். எனவேதான் எளிதில் கரையாமல் அப்படியே இருக்கும்.

குறிப்பாக குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு, பெரிய வயிறு பிரசவத்திற்குப் பின் சுருங்கியவுடன், காலி இடத்தில் காற்று சென்று அடைத்துக் கொள்ளும். இதனால் தொப்பை குறைய பல மாதங்களிலிருந்து வருடங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா :

யோகா :

தொப்பை மறைய உங்களுக்கு தீர்வு காண யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு என்றாலும் இந்த ஆசனம் சிறப்பானது.

வயிற்றுபகுதியில் அழுத்தம் தரப்பட்டு செய்யப்படும் இந்த யோகா மிகவும் பயனளிக்கும்.

பவன்முக்தாசனா :

பவன்முக்தாசனா :

பவன் என்றால் சமஸ்கிருதத்தில் காற்று என்று அர்த்தம். முக்தா என்றால் விடுதலை. இந்த ஆசனத்தால் வயிற்றிற்கு அழுத்தம் தரப்படுவதால் காலியான இடங்களில் அடைபட்டிருக்கும் காற்றை விடுவித்து தொப்பை குறைய ஏதுவாகிறது.

செய்முறை-1 :

செய்முறை-1 :

முதலில் கால் நீட்டி நேராக படுங்கள். கால்களை நேராக நீட்டி உடலை தளர்த்துங்கள். ஆழ்ந்து மூச்சை விட்டபடி வலது காலின் முட்டியை மடக்கி உயர்த்துங்கள்.

செய்முறை-2 :

செய்முறை-2 :

உங்கள் இருகைகளால் முட்டியை பிடித்துக் கொண்டு மார்பு வரைக்கும் முட்டியை கொண்டு செல்லவும். உள்ளங்கைகளை ஒன்றாக இணைத்து முட்டியை பிடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை-3 :

செய்முறை-3 :

இப்போது மெதுவாய் முட்டியை இன்னும் உயர்த்தி உங்கள் தாடைக்கு அருகே கொண்டு செல்லுங்கள். இப்போது ஆழ்ந்து மூச்சை இழுத்துவிடுங்கள். சில நொடிகளில் இதே நிலையில் இருந்த பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இதேபோல் இடது காலுக்கும் செய்யவும்.

 பலன்கள் :

பலன்கள் :

இது அடிவயிற்றிலுள்ள உறுப்புகளை பலப்படுத்துகிறது, கால்களை உறுதியாக்கும். இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். வயிற்றிலுள்ள கொழுப்புகளை கரைய மிகச்சிறந்த முறையில் பலன் அளிக்கக் கூடிய யோகாவாகும்.

 குறிப்பு :

குறிப்பு :

இந்த யோகாவை கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதுகு தண்டுவட பாதிப்பு இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

pavanmukthasana to reduce belly fat

Do this pavanmukthasana to cut off your belly fat,
Story first published: Friday, September 23, 2016, 11:10 [IST]
Desktop Bottom Promotion