For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறட்டையை விடுவது எப்படி தடுக்கலாம்? சின்ன சின்ன ட்ரிக்

|

குறட்டை விடுவது காமெடிக்காக சுட்டிக் காட்டினாலும் அது உண்மையில் சாதரண விஷயமில்லை. ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். சுவாசப் பாதையில், சீராக காற்று செல்லாதபோது இந்த மாதிரியான சத்தம் ஏற்படுகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

மூக்கில் சதை போன்று திசுக்கள் வளர்ந்தால், தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், உடல் பருமனால் அதிக சதைப் பகுதியினாலும் இவ்வாறு குறட்டை உண்டாகும். இதனால் தொண்டை எளிதில் வறண்டு விடும். காற்று ஓட்டம் பாதிக்கப்பட்டு மூச்சுத் திண்றல் கூட ஏற்படும்.

இப்படி விபரீதங்களை தரும் குறட்டையை கண்டும் காணாமல் விடுவது தவறு. உடனே சரிப்படுத்த முயலுங்கள். அதற்கான வழிகள் தெரியவில்லையென்றால் இங்கே பார்த்து தீர்வு காண முற்படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கும் முறையை மாற்றுங்கள் :

படுக்கும் முறையை மாற்றுங்கள் :

முதுகை அமுத்தியவாறு நேராக படுப்பது தவறு. இதனால் நாக்கு மற்றும் அண்ணம் இரண்டும் தொண்டையின் சுவர்களை பாதிப்பதால் அதிர்வு ஏற்படும்படி குறட்டை எழுப்பும். அதனால் பக்க வாட்டிலேயே படுக்க வேண்டும். உயரமான தலையணை வைத்துக் கொள்வது நல்லது. மறந்து போய் நேராக படுத்துக் கொள்கிறீர்களென்றால் முதுகின் பின்னால் மிருதுவான டென்னிஸ் பாலை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நேராக படுத்துக் கொள்வது தடுக்கப்படும்.

ஷவர் குளியல் :

ஷவர் குளியல் :

மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தாலும் குறட்டை உண்டாகும். இதற்கு இரவு தூங்குவதற்கு முன் இளஞ்சூட்டில் ஷவரில் குளித்தால், மூக்கடைப்பு விலகி திறந்து கொள்ளும். இது குறட்டையை தவிர்க்க உதவும்.

மது அருந்தல் தவறு :

மது அருந்தல் தவறு :

மது அருந்துவதால்தான் பெரும்பாலோனோருக்கு குறட்டை வரும் வாய்ப்புகள் அதிகம். மதுவினால் தொண்டை பகுதில் சதைகள் தளர்ந்து குறட்டையை ஏற்படுத்திவிடும்.

சுத்தமாக வைத்திருக்க வேண்டும் :

சுத்தமாக வைத்திருக்க வேண்டும் :

படுக்கை அறையை தூங்கப் போகுமுன் சுத்தப்படுத்திவிட்டு தூங்குங்கள். ஜன்னல் திரை, படுக்கை விரிப்பு ஆகியவற்றில் இருக்கும் தூசுக்கள் சுவாசப் பாதையில் அடைத்து குறட்டையை உண்டாக்கிவிடும்.

மூலிகை தேநீர் அருந்துங்கள் :

மூலிகை தேநீர் அருந்துங்கள் :

இரவு என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். காஃபி, பால், அதிக உணவு ஆகியவை குறட்டையை உண்டாக்கும். தூங்குவதற்கு மிகச் சில மணி நேரம் முன்பே சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு முன் க்ரீன் டீ, எலுமிச்சை தேநீர், பாலில்லாத தேநீர் ஆகியவை குறட்டையை தடுக்கும் மூலிகைகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

How to prevent Snoring

Simple Tricks to prevent Snoring
Story first published: Friday, August 26, 2016, 9:26 [IST]
Desktop Bottom Promotion