For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாங்க முடியாத பல்வலியா? இந்த ஒரு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

பல்வலி தாங்க முடியாது. பற்கள் மூளைக்கு அருகில் இருப்பதால் பல் வலியால் நரம்புகளும் பாதிக்கும் . அதனால் தலைவலியையும் உண்டாக்கும். அப்படியான பல் வலியை போக்கும் இந்த வைத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

|

அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் சரியாக பராமரிக்கவில்லையென்றாலும் பற்களில் கிருமிகள் தாக்கம், பற்சிதைவு, ஈறு வீக்கம் ஆகியவை உண்டாகக் கூடும்.

How to cure tooth ache using home ingredients

இதன் காரணமாக வரும் பல்வலி தாங்க முடியாததாக இருக்கும். இந்த வலியை போக்குவதற்கும் ப்ல பிரச்சனையை போக்குவதற்குமான ஒரு வழி இங்கே சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆரோக்கியமான ஈறு எது?

ஆரோக்கியமான ஈறு எது?

ஆரோக்கியமான ஈறு பற்களை இறுக பற்றியிருக்கும். அடர் பிரவுன் மற்றும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஈறாகும். அதுவே செக்க சிவப்பாய் சிவந்திருந்தால் அந்த ஈறு மிகவும் பாதிப்ப்டைந்திருக்கிறது என அர்த்தம்

பல் வலி போக்கும் சிகிச்சை

பல் வலி போக்கும் சிகிச்சை

தேவையானவை :

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

கிராம்பு பொடி - அரை ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போலக் கலக்குங்கள்.

 செய்முறை :

செய்முறை :

இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.

 பலன் :

பலன் :

இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to cure tooth ache using home ingredients

One recipe that can cure your tooth ache in a minute.
Desktop Bottom Promotion