மழைக் காலத்தில் நாம் மறந்தும் செய்துவிடக் கூடாத 5 தவறுகள்!

மழைக் காலத்தில் நோய் தொற்று எளிதாக அண்டும். முக்கியமாக உடை விஷயத்தில் நீங்கள் ஆரோக்கிய முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

Subscribe to Boldsky

நோய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும் காலம் இது. மழைக் காலத்தில் உணவு மூலமாக நோய் தொற்று ஏற்படுவதை விட, உடை பயன்பாட்டு விஷயங்கள் மூலமாக தான் எளிதாக, வேகமாக நோய் தொற்றுகள் உண்டாகின்றன.

மழைக் காலத்தில் உறங்கும் போது பயன்படுத்தும் போர்வை, நாள்தோறும் உடுத்தும் உடைகளில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக செய்வதனால் நாம் குளிர் / மழைக் காலத்தில் அதிகம் நோய் தொற்று உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

முக்கியமாக வீட்டில் இருக்கும் பெரியவர்க்க மற்றும் குழந்தைகள் இதை சரியாக பின்பற்ற வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பெட்ஷீட்!

மழைக் காலம் முழுவதும் ஒரே பெட்ஷீட், போர்வையை பயன்படுத்த வேண்டாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட், போர்வையை துவைக்க மறக்க வேண்டாம்.

ஆடைகள்!

அதே போல ஆடைகளை துவைத்த பிறகு வெயில் படும்படியான இடம் / வெயில் வெளிப்படும் நேரத்தில் உலர்த்த வேண்டும். இல்லையேல் ஆடையில் கிருமிகள் தொற்று அதிகரித்துவிடும்.

குளியல்!

மழைக் காலத்தில் குளிர் என அஞ்சி குளிப்பதற்கு லீவு விட வேண்டாம். ஒருநாளுக்கு இரண்டு முறை குளியுங்கள். குறைந்தபட்சம் சுடுதண்ணி வைத்தாவது இரண்டு முறை குளிக்க முயற்சி செய்யுங்கள்.

ஈரமான உடல்!

குளித்து முடித்தவுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். மழை / குளிர் காலத்தில் இதனால் எளிதாக காய்ச்சல், சளி உண்டாக வாய்ப்பிருக்கிறது.

வீடு!

வீடு மற்றும் வீட்டை சுற்றி இருக்கும் இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர் தேக்கங்கள் காரணமாக தான் கிருமிகள் மற்றும் நோய் தொற்றுகள் அதிகரிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Health Mistakes No One Should Do in Winter Season

Health Mistakes No One Should Do in Winter Season,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter