உடல் துடைக்க பயன்படுத்தும் டவலில் நம்மை அறியமால் நாம் செய்யும் 5 தவறுகள்!

நாம் குளித்து முடித்த பிறகு உடலை துடைக்க பயன்படுத்தும் டவலை சுத்தமாக வைத்துள்ளோம் என்பதை எதை வைத்து கண்டறிவது?

Posted By:
Subscribe to Boldsky

நம்மோடு தினமும் ஒட்டி உறவாடுவது எது எனில், நிச்சயம் அது உடல் துடைக்க நாம் பயன்படுத்தும் டவலாக தான் இருக்கும். நம் உடலில் இருக்கும் அழுக்கை துடைக்க பயன்படுத்தும் டவலை நாம் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்றால், நிச்சயம் இல்லை.

நாம் பெரும்பாலும் உடல் துடைக்கும் டவலில் தான் சுகாதாரம் பார்க்க தவறுகிறோம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும், எப்படி துவைக்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு டவல்!

இரண்டு டவல்!

இருவர் பயன்படுத்திய இரண்டு டவல்களை ஒன்றின் மேல் ஒன்று படுவது போல காயப் போடுவது, இரண்டு பாக்டீரியாக்கள் எளிதாக பரவவும், சுகாதாரம் சீர்கெடவும் காரணியாக இருக்கிறது.

துவைப்பது!

துவைப்பது!

பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு இது, உடல் துடைக்கும் டவலை சீராக துவைக்க மாட்டார்கள். இதனால் எளிதாக சருமத்தில் பாக்டீரியாக தொற்றும், அந்தரங்க பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகலாம். எனவே, ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையாவது துவைத்துவிட வேண்டும்.

மாற்ற வேண்டும்!

மாற்ற வேண்டும்!

ஒரே டவலை நீண்ட காலம் பயன்படுத்த கூடாது. சிலர் வருடக்கணக்கில் ஒரே டவலை பயன்படுத்துவார்கள். இது உங்களுக்கு நீங்களே செய்துக் கொள்ளும் தீங்கு.

டிடர்ஜென்ட்!

டிடர்ஜென்ட்!

உடைகள் துவைக்கும் போது அதிகளவில் டிடர்ஜென்ட் பயன்படுத்தக் கூடாது. இது அசௌகரியத்தை உண்டாக்கும்.

சுடுநீர்!

சுடுநீர்!

உடல் துடைக்க பயன்படுத்தும் டவலை சுடுநீரில் துவைக்க வேண்டியது அவசியம். அப்போது தான் பாக்டீரியாக்கள் முற்றிலும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Have You Washed Your Towel In The Last Six Months?

Have You Washed Your Towel In The Last Six Months? If No, You Are inviting Trouble For Your Health
Please Wait while comments are loading...
Subscribe Newsletter