For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் தாடி வளர்ச்சி அதிகரிக்க இந்த நான்கு வழியை பின்பற்றுங்கள்!

|

எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என எண்ணும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இன்று ஆண்மை, மற்றொன்று நன்கு தாடி வளர வேண்டும்.

ஆண்மையில் கோளாறு ஏற்படும் போது தான் பெரும்பாலான ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். தாடி என்பது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆண்களின் வீரத்தின் அடையாளமாகவும், ஆண்மையின் அடையாளமாகவும் திகழ்கிறது.

இதைதான் இன்றைய மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆம், ஆண்மையை ஊக்குவிக்கும் சுரப்பியான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் தாடி வளர்ச்சி இரண்டும் ஒன்றுடன், ஒன்று இணைந்துள்ளனவாம்.

இதையும் படிங்க: ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

இனி, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் தாடி வளர்ச்சி அதிகரிக்க பின்பற்ற வேண்டிய நான்கு வழிகளை பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் #1

ஸ்டெப் #1

உங்கள் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் உங்கள் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்.

லீன் மீட், முட்டைகள், பால் மற்றும் பீன்ஸ் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முனைவுகள்.

குறைந்தபட்சம் தினமும் உங்கள் உணவில் 50 கிராம் அளவாவது புரதச்சத்து உணவுகள் இருக்க வேண்டும். ப்ரோக்கோலி, மீன், வால்நட், மீன், கேரட் மற்றும் சிட்ரஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவையும் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் தாடி வளர்ச்சி இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க நீங்கள் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஓட்டப்பயிற்சி ஓர் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

பென்ச் பிரஸ், டெட் லிப்ட், ஸ்குவாட்ஸ் போன்ற பயிற்சிகள் உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க, ஊக்குவிக்க உதவும் பயிற்சிகள் ஆகும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

உங்கள் தாடியை என்றும் வறண்டு போக செய்ய வேண்டாம். ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள முயலுங்கள்.

உங்கள் தாடியின் வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, அதற்காக விற்கும் எண்ணெய்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

உங்கள் சருமத்தின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் தாடி வளர்ச்சி அதிகரிக்கும். இத்துடன் வியர்வை அதிகமாக வெளிவருவதால் முகத்தில் சேரும் அழுக்கு குறையும்.

ஆனால், வியர்வையை முகத்திலேயே காயவிட வேண்டாம். விரைவாக முகத்தை சுத்தமான நீரில் கழுவு நன்கு துடைக்க் வேண்டும். ஓர் நாளுக்கு இரண்டு மூன்று முறையாவது முகத்தை நன்கு கழுவி, துடைக்க பழகுங்கள்.

ஆய்வு!

ஆய்வு!

சமீபத்திய ஆய்வுகளில் தாடி முகத்தில் அலர்ஜி, சரும தொற்று ஏற்படாமல் இருக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. ஆம், தாடியில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் தீய பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

கெத்துதா!

கெத்துதா!

பொதுவாகவே ஆண்களுக்கு தாடி வளர்ப்பது என்றால் ஓர் தனி கெத்து இருக்கும். மேலும், இப்போது ஆரோக்கியம் என்பதால் நீங்கள் தாராளமாக தாடியை வளர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Four Steps to Increase Testosterone and Beard Growth

There Are Four Steps to Increase Testosterone and Beard Growth, take a look on here.
Desktop Bottom Promotion