அர்த்ரைடிஸ் வராமல் காக்க இந்த 5 யோகாசனங்கள் செஞ்சு பாருங்க !!

மூட்டு வலி இன்று 20 களின் இறுதியிலேயே கூட வருகிறது. இதற்கு மரபணு, ஊட்டச்சத்தில்லாத உணவுகள்,உடலுக்கு போதிய பயிற்சிகள் இல்லாமல் இருப்பது எனபல காரணங்கள் உள்ளன. யோகா செய்வதால் ஆர்த்ரைடிஸ் வராமல் காக்கலாம்

Subscribe to Boldsky


மூட்டு வலி எலும்புகள் பலவீனமடைவதாலும் எலும்புகள் இணையும் இடத்தில் இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படுவதாலும் உண்டாகும்.

ஒவ்வொரு வருடமும் 30-50 வயதுகுட்பட்ட சுமார் 15 கோடி மக்கள் ஆர்த்ரைடிஸினால் பாதிக்கப்படுகிறார்கள் என கணக்கெடுப்பு கூறுகிறது.

5 yoga poses to prevent arthritis

மூட்டு இணைப்புகளில் வீக்கம், வலி, ரத்த சோகை, காய்ச்சல், இவைகளெல்லாம் ருமடாய்டு ஆர்த்ரைடிஸின் அறிகுறிகளாகும்.

இதற்கு தகுந்த மாத்திரைகளை விட நாம் செய்யும் பயிற்சிகாள் எலும்பு மற்றும் இணைப்பு திசுக்களை வலுப்படுத்தமுடியும். அப்படியான பயிற்சிகள் யோகாவில் இருக்கின்றன.

ஆர்த்ரைடிஸை வராமல் காக்கும் யோகாசனங்களை இப்போது பார்க்கலாம். யோகாவின் பெயர்களையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு தகுந்த பயிற்சியாளரின் உதவியுடன் செய்யும்போது முழுப்பலனும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சூரிய நமஸ்காரம் :

இது மிகச் சிறந்த யோகா. அதிகாலை செய்வது சிறந்த முறையில் பலனளிக்கும். இது தலையை மேல் நோக்கி பார்த்து , தரையில் கைகளை பதித்து உடலை வளைத்து செய்வதால் எலும்புகள் பலப்படுகின்றன.

மூச்சுப் பயிற்சியும் இதில் இருப்பதால் நுரையீரல் சுத்தமாகிறது.

சவாசனா :

சவாசனா என்பது உடலை தளர்வாக படுக்க வைத்து மூச்சை மெதுவாக விடுவதாகும். இதனை செய்யும் போது மனம் அமைதி பெறுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

ஆஞ்சி நேயாசனம் அல்லது பிறை ஆசனம் :

இடது காலை அழுத்தமாக தரையில் பதிந்து வலது காலை அகற்றி வளைத்து உடலை வலது பக்கம் திருப்பி நமஸ்காரம் செய்வதுபோல் கைகளை குவித்து செய்யப்படுவதாகும் இந்த ஆசனம்.

இதுபோல் இடது காலையும் வளைத்து செய்ப்படுகிறது. மூட்டு வலியை குணமாக்கும்.

சேது பந்தாசனம் :

இந்த ஆசனத்தில் நேராக படுத்து கால்களை மடக்கி பாதத்தை ஊன்றியவாறு உடலை மட்டும் பாலம் போல் தூக்கி, தலை மற்றும் பாதம் தரையிலிருக்கும்படியான நிலையில் செய்யப்படுகிறது.

விருக்ஷாசனா :

மரம் போன்று கீழே குறுக்கி மேலே விரிந்த நிலையில் செய்யப்படுவதாகும். ஒற்றை கால் நின்று இன்னொருகாலை தொடையில் பதித்து, கைகளை மேலே வணக்கம் செய்வது போல் அமைத்து நிற்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

5 yoga poses to prevent arthritis

Do these 5 important yoga poses to prevent arthritis
Please Wait while comments are loading...
Subscribe Newsletter