For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாத விலக்கை மாத்திரையால் தள்ளிப் போடலாமா?

மாதவிலக்கை தள்ளிப் போவதற்காக சாப்பிடும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் பற்றி இங்கே ஒரு மருத்துவரால் விளக்கம் தரப்பட்டுள்ளது.

|

மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால் மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களையும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே என்று குஷியாகும் பெண்களின் காலம்!

இவர்களில் பலரும், இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்த தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி என மருத்துவர் கூறுகிறார் கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மாதவிடாய்

மாதவிடாய்

மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும்.

பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.

அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்

மாத்திரை :

மாத்திரை :

விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்

டெஸ்ட் :

டெஸ்ட் :

மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.

அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால் அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது.

பக்கவிளைவுகள் :

பக்கவிளைவுகள் :

டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

பக்கவிளைவுகள் :

பக்கவிளைவுகள் :

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். இதனால் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்.

 பொட்டுக் கடலை

பொட்டுக் கடலை

மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம்.

பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

postponing periods is good or bad

Side effects of taking pills for postponing periods
Story first published: Saturday, April 22, 2017, 14:15 [IST]
Desktop Bottom Promotion