For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் பாதுகாப்பது எப்படி?

கர்ப்பப்பை வாய் புற்று நோய் வராமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் இங்கே தரப்பட்டுள்ளது.

By Peveena Murugesan
|

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய உதவும் பரிசோதனைகள்:பேப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் HPV பரிசோதனை.இந்த பரிசோதனைகள் இரண்டும் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.மேலும் இந்த சோதனைகள் மூலம் செல்கள் புற்றுநோய் செல்களாக மாற வாய்ப்புள்ளதை கண்டறிவதுடன் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும் உதவுகிறது.

How to protect yourself from cervical cancer

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் சாதாரண செல்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதற்கு முன்பே கண்டறிய உதவுகிறது. பேப் ஸ்மியர் பரிசோதனையின் மூலம் நோய் தொற்றுகளையும்,வீக்கங்களையும் கண்டறிய முடியும் மற்றும் HPV பரிசோதனை இயற்கைக்கு புறம்பான அமைப்பாக செல்களை மாற்றக்கூடிய பாப்பிலோமா வைரஸ் இருப்பதை கண்டறிய உதவுகிறது.

நம் நாட்டில் இந்த பரிசோதனைகளை பற்றிய தெளிவு இல்லாததால் மற்ற உலக நாடுகளை விட இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
HPV வைரஸ் என்றால் என்ன?

HPV வைரஸ் என்றால் என்ன?

HPV வைரஸ் என்பது பால்வினை தொற்று ஆகும்.ஒவ்வொரு குழுவிலும் உள்ள HPV வைரஸ் அனைத்தும் தனித்தனியாக HPV வகையைச் சார்ந்தது.HPV வைரஸ் சில செல்களின் மேற்புறத்தில் ஈரமான பரப்புகளில் இருக்கும்.HPV வைரஸ் 90% இந்த புற்றுநோய் உருவாவதற்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது.

யாருக்கெல்லாம் வரலாம்?

யாருக்கெல்லாம் வரலாம்?

நோய்த் தோற்று ஏற்பட்டாலும் பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை ஏனெனில் நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய் தொற்றுக்கு எதிராக போராடி புற்றுநோய் வராமல் தடுக்கும்.ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், புகை பிடிப்பவர்கள், மிகவும் இளம் வயதில் உடலுறவில் ஈடுபடுதல்,பலருடன் உடலுறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் இந்த புற்றுநோய் ஏற்படும்.

பேப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

பேப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

இந்த இரண்டு பரிசோதனைகளும் முறையாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.இது இடுப்புப் பகுதியில் செய்யப்படுகிறது.இந்த பரிசோதனைக்கு பெண்கள் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களின் பெண்ணுறுப்பு வழியாக கருப்பை வாய் பகுதியில் ஸ்பெக்குலம் (பொருள்களை பிரதிபலிக்கச் செய்யும் உலோகம்) மூலம் மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது.அங்கிருந்து செல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் நுண்ணோக்கி மூலம் பரிசோதனை செய்யப் படுகிறது.

கால இடைவெளி :

கால இடைவெளி :

பேப் ஸ்மியர் பரிசோதனை கர்ப்பப்பை வாய் புற்றுநோயை மட்டுமே கண்டறிய உதவும் ஆனால் கரு மற்றும் கருப்பை சார்ந்த, பெண்ணுறுப்பு (அ) பெண்ணின் கருவாய் இவற்றில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில்லை.இந்த சோதனை பாலியல் ரீதியாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.தேசிய புற்றுநோய் நிறுவனம் பின்வரும் வழிமுறைகளை வழங்குகிறது.

 வயதினை பொறுத்து :

வயதினை பொறுத்து :

21-29 வயதுப்பெண்கள்:பேப் ஸ்மியர் சோதனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை. 30-65 வயது பெண்கள்:பேப் ஸ்மியர் மற்றும் HPV சோதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை (அ) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் மட்டும்.

HPV தடுப்பு மருந்துகளுக்கு பிறகும் வழக்கமான சிகிச்சையை தொடர வேண்டும்.ஏனெனில் HPV தடுப்பு மருந்துகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அனைத்து HPV வகைகளையும் கட்டுப்படுத்த முடியாது.

பல்வேறு சிகிச்சை முறைகள்:

பல்வேறு சிகிச்சை முறைகள்:

லீப்(லூப் மின் வெட்டி எடுக்கும் செய்முறை),க்ரியோதெரபி (குளிர் மருத்துவம்),லேசர் சிகிச்சை,கூம்பு உடல்திசு ஆய்வு போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன.

இதற்கு மாறாக சில நேரங்களில் சில குறைபாடுகளும் உள்ளன.முதல் குறைபாடு என்னவெனில் கர்ப்பப்பை வாயில் உள்ள சில சாதாரண செல்களை இயல்பற்ற செல்களாக காட்டிவிடுகிறது.இரண்டாவது குறைபாடு சில செல்கள் இயல்பற்றதாக இருந்தாலும் அது தற்காலிகமானதாகக் கூட இருக்கும் காலப்போக்கில் இயல்பான செல்களைப் போன்று மாறிவிடும்.அதனால் பிற சோதனைகளையும் மேற்கொண்டு இந்த செல்களைக் கண்டறிய வேண்டும்

முன்னெச்செரிக்கை :

முன்னெச்செரிக்கை :

முடிவில் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 100% தடுக்குகூடியது , கண்டறியக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது

ஆனால் இவை காலக்கட்டத்தை பொறுத்தது.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு மற்றும் தடுப்பு செயற்பாடுகள் பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் செல்கள் புற்றுநோய் செல்களாக மாறாது.இவை அனைத்தையும் தெரிந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to protect yourself from cervical cancer

Types of Tests to be done to protect yourself from cervical cancer
Story first published: Thursday, April 27, 2017, 10:53 [IST]
Desktop Bottom Promotion