For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அல்சர் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

அல்சர் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

By Peveena Murugesan
|

துரித உணவுகள் நிறைய சாப்பிடுதல்,சில நேரங்களில் மிகவும் தாமதமாக சாப்பிடுதல் மற்றும் பிற மோசமான உணவு உண்ணும் பழக்கம் இவற்றால் வயிற்றின் உட்புற பகுதியில் உள்ள சவ்வில் அரிப்பு ஏற்பட்டு புண்கள் ஏற்படுகிறது.

குடல் புண்கள் ஏற்படும் இடம் மாறுபட்டு வெவ்வேறு இடங்களில் இருக்கிறது.குடல் புண்களை குணமாக்க மற்றும் அவற்றால் ஏற்படும் தீங்குகளை தவிர்க்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் உள்ளன.

குடல் புண்ணின் அறிகுறிகளும் இன்ன பிற நோய்களின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருக்கும்.எனவே மிகவும் கவனமாக இதன் அறிகுறிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் புண்ணின் அறிகுறிகள்:

குடல் புண்ணின் அறிகுறிகள்:

வயிற்றின் மேல் பகுதியில் அதிகமான வலி அல்லது அசௌகரியம். சாப்பிட பிறகு வலி ஏற்படும். சில குடல் புண் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருந்தால் வலி ஏற்படும்.ஆனால் சாப்பிட்ட பிறகு வலி குறைந்து விடும்.

அதிகப்படியான வாயு பிரச்சனை, குடல் புண்களின் விளைவாக மலத்தின் வழியாக ரத்தம் கசிதல். நாள்பட்ட ரத்த இழப்பு காரணமாக ரத்த சோகை ஏற்படும்.

 எதனால் இந்த குடல் புண்கள் ஏற்படுகிறது?

எதனால் இந்த குடல் புண்கள் ஏற்படுகிறது?

குடலில் புண் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பது தான்.வயிற்றில் உள்ள இந்த அமிலம் உணவை செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.

ஆரோக்கியமற்ற உணவு உண்பதால் இந்த அமிலம் அதிகமாக சுரந்து வயிற்றின் மேற்பரப்பில் உள்ள சவ்வில் எரிச்சலை ஏற்படுத்தி புண்களை ஏற்படுத்தும்.ஆரோக்கியமற்ற உணவே மிகவும் முக்கிய பிரச்சனை ஆகும்.

குடல் புண்கள் ஏற்பட இன்னும் சில காரணங்கள்:

குடல் புண்கள் ஏற்பட இன்னும் சில காரணங்கள்:

எண்ணெய் மற்றும் காரமான உணவுகள். மன அழுத்தம். சரியான நேரத்தில் சாப்பிடாமல், நேரம் தவறி சாப்பிடுவதால். மது அருந்துதல். புகை பிடித்தல்.

குடல் புண் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

குடல் புண் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமற்ற உணவு முறையை மாற்றுவதே மிகவும் முக்கியமான குறிப்பு குடல் புண்ணை குணப்படுத்த.அதிகமான அமிலத்தன்மையைக் குறைக்க அதற்கு தகுந்த உணவுகளை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.எனவே ,தயிர்,பழங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழை பழம் மிகவும் சிறந்தது.இவை அனைத்தும் அமிலத்தின் உற்பத்தியைக் குறைத்து குடல் புண்களுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.பால் பொருட்களில் சிலருக்கு அலர்ஜி போன்று இருந்தால் ஆடு அல்லது மாட்டு பாலுக்கு மாற்றாக பாதாம் பால் எடுப்பது சிறந்தது.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

உடல் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில் இவை அமில தன்மையை அதிகரித்து குடல் புண்களை உருவாக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்து வந்தால் குடல் புண்கள் வராமல் தடுக்கவும்,குடல் புண்களை குணமடையவும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective remedies to heal Stomach ulcer

Effective remedies to heal Stomach ulcer
Story first published: Wednesday, April 19, 2017, 12:55 [IST]
Desktop Bottom Promotion