9 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா - மருத்துவர்கள் போராடி நீக்கினர்!

பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனாவை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

Posted By:
Subscribe to Boldsky

பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீண்ட காலமாக துர்நாற்றம் வீசும் வகையிலான சளித் தொல்லையாலும், இருமல் தொல்லையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணம் என்ன என்று பரிசோதனை செய்த போது தான். அப்பெண்னின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேணுகா!

ரேணுகா!

பெங்களூரை சேர்ந்த 19 வயதே ஆன இளம் பெண் ரேணுகா, இவருக்கு அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையில் சளித்தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் உண்மை தெரியவந்தது.

ராஜீவ் காந்தி சிகிச்சை மையம்!

ராஜீவ் காந்தி சிகிச்சை மையம்!

பெங்களூருவில் இருக்கும் ராஜீவ்காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார் ரேணுகா. அப்போது ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள். ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனாவின் சில பாகங்கள் சிக்கியிருப்பதை அறிந்தனர்.

தொல்லை!

தொல்லை!

நுரையீரலில் சிக்கியிருந்த அந்த பேனா பாகங்களின் காரணத்தால் தான் அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையிலான சளித்தொல்லை, இருமல் போன்ற தொல்லைகளால் ரேணுகா பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

உள்ளுறுப்புகள் சேதம்!

உள்ளுறுப்புகள் சேதம்!

நீண்ட காலமாக ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் தங்கியிருந்ததால் உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டு சிதைந்து போகும் நிலைக்கு ஆளாகியிருந்தன.

குறிப்பாக இதன் காரணமாக தான் சளியில் துர்நாற்றம் வீசியிருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

இதையடுத்து, ரேணுகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரலில் தங்கியிருந்த பேனா பாகங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

இந்த அறுவை சிகிச்சை தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Doctors Successfully Removed Pen Lodged in Teenage Girls Lungs for 9 Years!

Doctors Successfully Removed Pen Lodged in Teenage Girls Lungs for 9 Years!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter