ஏன் மூக்கடைப்பு உண்டானால் காது வலி உண்டாகிறது தெரியுமா?

காது வலி உண்டானால் வலி உயிர் போய் விடும். காது வலிக்கு பல காரணங்கள் உள்ளன. காதுவலிக்கு காரணங்கள், அதனை எப்படி குணப்படுத்தலாம் எப்படி தவிர்க்கலாம் என்று இங்கே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Boldsky

காது வலி எளிதில் வராது. வந்தால் உயிர் போகும் அளவிற்கு வலி உண்டாகும். காதுவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

எதனால் காது வலி வருகிறது? எங்கே வலி உண்டாகிறது அதனை எப்படி கண்டறியலாம். எப்படி குணப்படுத்தலாம் என்று அடிப்படையான விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காதுவலிக்கு காரணம் என்ன?

மூக்கிலிருந்து காதிற்கு ஒரு சிறு குழாய் இணைகிறது. சளி பிடிக்கும்போது இந்த குழாய் வீக்கமடைகிறது. இதனால் சுரக்கும் திரவமானது காதினுள்சென்று அங்கே கிருமிகளை பெருக்குகிறது. இதனால் காதிலும் வீக்கம் உண்டாகி வலி ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் அதிகம் உண்டாகும் :

இது அதிகமாக குழந்தைகளுக்கு உண்டாகும். அவர்களுக்கு மூக்கையும் காதையும் இணைக்கும் குழாய் வெகு அருகிலேயே இருப்பதால் விரைவில் ஜலதொஷம் பிடித்தால் விரைவில் காதிலும் தொற்று உண்டாகிவிடும்.

எப்படி குணப்படுத்துவது :

கண்டதையும் காதில் விடுவது இன்னும் தொற்றை அதிகப்படுத்திவிடும். ஆகவெ மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் காதில் செய்ய வேண்டாம்.

இது காதுகேட்கும் திறனையே பாதிபப்டைய செய்துவிடும். ஆகவே என்ன பிரச்சனை என்று கண்டறிந்து மருத்துவர் தரும் சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

 

எப்படி தடுக்கலாம்?

புகை பிடிப்பது தவிர்க்க வேண்டும். அதுபோல் குழந்தைகளுக்கு காது வலி இருந்தால் அவர்கள் முன்னிலையில் புகைப்பிடித்தலும் தவறு.

எப்படி தடுக்கலாம்?

சளி இருமம் தொண்டையில் உண்டாகும் தொற்றின் காரணமாகவும் காதில் வலி உண்டாகும். ஆகவே விரைவில் இவற்றை குணப்பெறச் செய்தால் காதில் உண்டான தொற்றும் குணமாகும்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Causes and treatment for middle ear infection

Causes and treatment for middle ear infection
Please Wait while comments are loading...
Subscribe Newsletter