புகைப் பிடிப்பதை நிறுத்தனுமா? உங்களுக்கான வழிகள்!!

புகைப் பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்து தான். அப்படி நிறுத்த நினைத்தும் அதனை விட முடியாமல் தவிப்பவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வழிமுறைகள்.

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

புகைப் பிடிப்பது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் ஒரு நாகரிகமாகிவிட்டது. அதை ஒரு ஃபேஷனாகக் கருதி சிறு வயது முதலிலேயே அந்தப் பழக்கத்தை பழகி கொள்கின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் தான் புகைப்பிடித்து வந்தனர். ஆனால், இப்பொழுது வெளிநாட்டு நாகரிகத்தைப் பார்த்து பழகி நம் நாட்டுப் பெண்கள் கூட அதை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இது பல்வேறு வகையான புற்றுநோயை உண்டாக்கக்கூடும். புற்று நோய் மட்டுமல்ல ஆஸ்துமா, காசநோய், சைனஸ் இன்னும் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

புகைப் பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்து தான். இதனை அனுபவித்தப் பிறகு தான் பலர் இதனை தவிர்க்க நினைக்கிறார்கள். அப்படி நிறுத்த நினைத்தும் அதனை விட முடியாமல் தவிப்பவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

புகைப்பழக்கத்தை நிறுத்த சில எளிய வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஊக்கமளிக்கக்கூடிய குறிப்புகள்:

நீங்கள் உங்களுக்காகவே சில குறிப்புகளைச் சிறு காகிதத்தில் எழுதி அதை உங்கள் கண் பார்வையில் அடிக்கடி படும் இடங்களில் வைக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஆபிஸ் டெஸ்க், ஃப்ரிட்ஜ் கதவு அல்லது காரின் உள்பகுதி போன்ற இடங்களில் வைக்கலாம். இப்படி செய்வதால் அந்த குறிப்புகள் உங்களை புகைப்பிடிக்கக் கூடாது என்று ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். இதனால் சுலபமாக இந்தப் பழக்கத்தை விட்டு விடலாம்.

 

உடற்பயிற்சி

புகைப்பிடிக்க வேண்டும் என்று உங்கள் மனம் ஏங்கும் போது நீங்கள் உடனே சில உடற்பயிற்சி அல்லது சிறிது தூரம் ஓடலாம். இது உங்கள் மூளையில் சில அமிலங்களை உற்பத்தி செய்யும். அது உங்களை புகைப்பிடிக்கும் ஏக்கத்தில் இருந்து தடுக்கும்.

நண்பர்களுடன் நேரம் செலவிடுவது

உங்களுக்கு புகைப்பிடித்தே ஆகவேண்டும் என்று தோன்றினால் நீங்கள் உடனே உங்கள் நண்பர்களின் உதவியை நாடலாம். அவர்களிடம் நீங்கள் முன்பே உங்களை புகைப்பிடிப்பதிலிருந்து காப்பாற்ற உதவி கேளுங்கள். எனவே, அவர்களோடு நீங்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் உங்களை புகைப்பிடிக்க விடமாட்டார்கள். இதுவும் ஒரு சிறந்த வழி.

 

 

யோகா பயிற்சி

தினந்தோறும் யோகா செய்யும் பழக்கமிருந்தால் அது உங்கள் மன உறுதியை மேம்படுத்தும். உறுதியான மனமிருந்தால் நிச்சயம் உங்களால் புகைப் பழக்கத்தை மிக எளிதில் மறக்க முடியும்.

மனதை திசைத் திருப்புவது

நீங்கள் உங்களை புது பொழுதுப்போக்கில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அதாவது, உங்களுக்கு பிடித்த வேறு விஷயங்கள், உதாரணத்திற்கு பாடுவது, படம் வரைவது, வெளியில் சுற்றுவது போன்றவைற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ங்கள்.

எப்போதெல்லாம் உங்களுக்கு புகைப்பிடிக்கத் தோன்றுகிறதோ அப்போதேல்லாம் உங்கள் மனதை புது பொழுபோக்கில் செலுத்துங்கள்.

 

குடிப்பதை தவிர்க்கவும்

நிறைய பேருக்கு மது குடிக்கும் போது புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும். எனவே, புகைப் பிடிப்பதை நிறுத்த விரும்புபவர்கள் முதலில் குடிப்பழக்கத்தை விட வேண்டும்.

இயற்கை சிகிச்சை முறை

இயற்கை சிகிச்சை முறை அதாவது அக்குபங்சர். இந்த சிகிச்சை முறையில் ஊசிகளை உடலின் குறிபிட்ட இடங்களில் வைத்து சிகிச்சைகளை மேற்கொள்ளுவர். இது போன்ற முறைகளால் சுலபமாக புகைப் பழக்கத்தை மறுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Best tips to quit smoking quickly

Best tips to quit smoking quickly
Please Wait while comments are loading...
Subscribe Newsletter