முடக்கு வாதத்தை சரிசெய்யும்மிகச் சிறந்த 6 மருத்துவ உணவுகள்!

முடக்கு வாதத்தை குணப்படுத்த மாத்திரை, மருந்துகளை விட, இயற்கையான உணவுகளை சாப்பிட்டு குணப்படுத்தலாம். அவ்வகையில் நீங்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுப் பொருட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Written By:
Subscribe to Boldsky

முடக்கு வாதம் என்பது மூட்டிலுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிந்து அதனால் உண்டாகும் வீக்கத்தினால் ஏற்படுவது. முடக்கு வாதம் மிகுந்த வலியை உண்டாக்கும். இணைப்புகளில் வீக்கம், மற்றும் பாதிப்புகளை தரும்.

6 Natural remedies to treat Gout

இந்த வலிகளை போக்கவும், யூரிக் அமில உப்புககளை கரைக்கவும் நாம் உண்ணும் உணவுகளை பயன்படுத்தலாம். இவை இயற்கையாகவே வலிகளையும், பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றலை பெற்றவை.

அவ்வாறு எத்தகைய உணவுகள் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தலாம் என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம் :

வெந்தயம் :

முந்தைய இரவில் வெந்தயம் 1 ஸ்பூன் அளவு எடுத்து சிறிது நீரில் ஊற வையுங்கள். மறு நாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும். வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும். பாதிக்கப்பட்ட இடங்கலில் வலி குறையும்.

பூண்டு :

பூண்டு :

பூண்டு முடக்கு வாதத்திற்கான மிகச் சிறந்த மருத்துவ உணவு. 2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது முடக்கு வாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.

ஓமம் மற்றும் இஞ்சி :

ஓமம் மற்றும் இஞ்சி :

ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும். இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும். இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.

 விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெயை சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை லேசாக சூடுபடுத்தி மசாஜ் செய்யுங்கள். இவை வலியையும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.

கொத்துமல்லி தழை :

கொத்துமல்லி தழை :

கொத்துமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்துமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இது யூரிக் அமிலத்தை குறைக்கச் செய்கிறது. இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து , மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவாகும்.

செர்ரி :

செர்ரி :

செர்ரி பழங்கள் முடக்கு வாதத்தை குனப்படுவதோடு மட்டுமல்லாமல் முகடக்கு வாதம் வராமலும் தடுக்கும் என சமீப ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. தினமும் அரை கப் அல்லது 10-12 செர்ரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம் கீல் வாதம் ஆகிய்வை வராமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Natural remedies to treat Gout

6 Natural remedies to treat Gout
Please Wait while comments are loading...
Subscribe Newsletter