பெண்கள் தொடும் போது மட்டும் ஆண் உடல் சிலிர்ப்பது ஏன்?

Subscribe to Boldsky

பதின் வயதுகளில் பெண்களை கண்டாலே ஆண்களுக்கு சிலிர்க்கும், இது இயல்பும் கூட. அப்படி சிலிர்ப்பு ஏற்படாமல் இருந்தால் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அந்தந்த வயதிற்கு ஏற்ப ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

பெரும்பாலும் யாரும் அறியாத ஆண், பெண் உடல் கூறு சார்ந்த தகவல்கள்!!!

எனினும், பெண்கள் தீண்டும் போது, ஏன் லேசாக தெரியாமல் அவர்களது விரல் ஆண் உடலுடன் உரசிவிட்டால் கூட ஓர்வித சிலிர்ப்பு ஏற்படும். அது ஏன் என்று என்றாவது நீங்கள் உணர்ந்ததுண்டா? இதே ஆண்கள் விரல் உரசினால் இந்த சிலிர்ப்பு ஏற்படாது.

இந்த விஷயங்களில் பெண்களை பற்றிய எண்ணங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்!!!

இதையும் கூட டேனியல் என்ற ஆன்ரியாவில் உள்ள ஆய்வாளர் ஆராய்ச்சி செய்துள்ளார், அவர் என்ன கண்டறிந்தார் என இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மெஸ் மாஸ்டர் பல்கலைக்கழகம்

பெண்கள் தீண்டும் போது ஆண் உடல் சிலிர்ப்பது ஏன் என ஆன்ரியாவில் உள்ள மெஸ் மாஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சுவாரஸ்யமான உண்மைகள் வெளியாகியுள்ளன.

நூறு கல்லூரி மாணவிகள்

இந்த ஆராய்ச்சியில் நூறு கல்லூரி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை சில ஆண்களை தீண்ட வைத்து அந்த ஆணிடம் என்ன மாற்றம் ஏற்படுகிறது என ஆராய்ச்சி செய்தனர்.

தொட்ட மாத்திரத்தில்

அந்த பெண்கள் தொட்ட மாத்திரத்தில் அனைத்து ஆண்களும் சிலிர்த்து போயினர். சில ஆண்களுக்கு மயிர் கூச்சம் ஏற்பட்டு ரோமங்கள் எழுந்து நின்றனவாம்.

பெண்களின் கை விரல்கள்

அப்படி அந்த மாணவிகளின் கை விரல்களில் என்ன தான் இருக்கிறது என ஆராய்ச்சி செய்ய தொடங்கினார் டேனியல் கோல்டுரிக் எனும் ஆய்வாளர்.

நுனி விரல் இரகசியம்

இந்த ஆய்வின் போது தான் பெண்களின் நுனி விரலில் தான் அந்த இரகசியம் இருக்கிறது என கண்டறியப்பட்டது. பெண்களின் விரல்கள் ஆண்களின் விரல்களை விட மென்மையாகவும், குட்டையாகவும் இருப்பது தான், தொட்டதும் திடீரென சிலிர்ப்பு ஏற்பட காரணம் என டேனியல் கூறியுள்ளார்.

ஆண்கள் கருத்து

இந்த ஆய்வின் போது, பெண்கள் தீண்டிய போது சில ஆண்கள் வெட்கம் கொண்டு நெளிந்து போனார்களாம்.

அந்த உணர்வு

சில ஆண்கள், அந்த பெண்கள் எங்களை தீண்டிய போது உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளனர்.

பாதம்

ஒரு ஆணின் பாதத்திற்கும், பெண்ணின் பாதத்திற்கும் கூட நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பெண்களின் பாதம் மென்மையாகவும், குறுகியதாகவும் இருக்கிறது. இது தான் பெண்களின் பாதங்களை அழகாக, கவர்ச்சியாக இருக்க காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Why Girls Touch Makes Men Thrill

Do you know why girls touch makes men Thrill? Read here in Tamil.
Story first published: Thursday, February 4, 2016, 9:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter