For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேங்கோ நடனம் பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் !!

|

உலகமெங்கும் டேங்கோ நடனம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனக்கென்று துணையை சேர்த்து பெரிய பார்ட்டிகளில் டூயட் ஆடுவது. இது அர்ஜென்டைனாவில் கலாச்சார நடனம். அது எல்லாராலும் கவரப்பட்டு அதன்பின் உலகமெங்கும் பரவியது.

இந்த நடனம் ஜோடிகளை சேர்க்கிறதோ இல்லையோ, புற்று நோய் சிகிச்சையினால் வரும் பக்க விளைவுகளை குறைக்கிறது என்று ஆய்வு சொல்கிறது.

Tango therapy reduces pain during cancer treatment

70 % புற்று நோய் நோயாளிகள் கீமோதெரபிக்கு பிறகு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது நரம்பு தளர்ச்சி, பலஹீனம், கைகால்களில் உணர்ச்சி மரத்துப் போதல், தாங்க முடியாத வலி, நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது.

தொடர்ந்து 5 வாரங்களுக்கு டேங்கோ நடன தெரபி புற்று நோயாளிகளுக்கு தரப்படும்போது, அவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதில்லை என்று மகிழ்ச்சியாய் கூறுகின்றனர்.

இந்த நடனத்தை பயிற்சி அளிக்கப்படுவதால், புற்று நோயாளிகள் நேர்மறை எண்ணத்துடனும், சந்தோஷமான மன நிலையிலும், இருப்பதால், அவர்களுக்கு ரத்த மற்றும் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் உருவாவதில்லை என்று அமெரிக்காவிலுள்ள ஒஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மிமி லமன்டா கூறுகிறார்.

அதேபோல், இந்த நடனம் பிஸியோதெரபியை விட எளிமையாகவும், செய்வதற்கு திருப்திகரமாகவும் இருக்கிறது என்று நோயாளிகள் கூறுகின்றனர்.

நிறைய நோயாளிகளுக்கு பிஸியோதெரபி செய்வது விருப்பமற்றதாகவும், வேலை செய்வது போல் கடினமாகவும் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் இந்த நடனம் ஆடும்போது அத்தகைய எண்ணம் வருவதில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.

கீமோதெரபி போன்ற சக்தி வாய்ந்த சிசிச்சைக்கு பின் நோயாளிகளை இயல்பிற்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவாலான விஷயம். அவர்களுக்கு மன மகிழ்ச்சியும் அதே சமயத்தில் இந்த வலிகளை போக்கக் கூடியதாகவும் இருக்கிறது இந்த தெரபி என்று மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்.

English summary

Tango therapy reduces pain during cancer treatment

Tango therapy reduces pain during cancer treatment
Story first published: Tuesday, July 19, 2016, 18:03 [IST]
Desktop Bottom Promotion