For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க அடிக்கடி செல்ஃபி எடுப்பவரா? உங்களுக்குதான் இது

|

செல்ஃபி எல்போ" அதாவது முழங்கையில் தொடர்ந்து சிரமத்தை தரும்போது உண்டாகும் பாதிப்புதான் செல்ஃபி எல்போ. எதனால் இந்த பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் எல்லாருமே செல்ஃபி பிரியர்களாகத்தான் இருக்கிறோம். செல்ஃபி எடுக்கும்போது முழங்கையை வளைத்து நம்மை நாமே விதவிதமாக எடுத்துக் கொள்கிறோம்.

Taking frequent selfie leads to

இதற்கு அடிமையானவர்களும் உண்டு. ஒரு வியாதி போல, போகும் இடங்களுக்கெல்லாம், வித்யாசமாக பலபல விதமாய் செல்ஃபி எடுத்துக் கொள்ள பிரியப்படுபவர்கள் நிறைய பேர். இதனால் உயிர் துறந்தவர்கள் கூட உண்டு.

தீவிரமான இந்த செல்ஃபி யின் விளைவால், பாதிப்புகள் வரத்தானே செய்யும். அப்படி ஒரு புது வியாதிதான் செல்ஃபி எல்போ. முழங்கையை மடித்து, இப்படி அடிக்கடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தால், முழங்கையில் உள்ள திசுக்கள் சிதைந்து அங்கே வீக்கம், பாதிப்பு உண்டாகிறது. இதனால், அங்கே நுண்ணிய சிதைவு உண்டாகி இந்த பாதிப்பை உருவாக்கியுள்ளது.

சமீபமாக அமெரிக்காவில் விருது பெற்ற பத்திர்க்கையாளர் ஹோடா கோட்பிற்கு இந்த வியாதி கண்டறியப்பட்டுள்ளது. ஐஸ் ஒத்தடம் மற்றும் சில கைப் பயிற்சிகளை அவருக்கு மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக செல்ஃபி எடுத்துக் கொள்பவர், வேலைக்கும் செல்பவராக இருந்தால், ஒரு சில வாரங்களிலேயே இந்த பாதிப்பு உண்டாகிவிடும் என்று சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டைரக்டர் நிஷ்சல் சுக் கூறுகிறார்.

செல்ஃபி எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பாதிப்புகள் மிக விரைவிலேயே கண்டறியப்பட்டாலும், தவறான நிலையில் கைகளை தொடர்ந்து வைத்திருப்பதால், முழங்கை மூட்டுகளில் இன்னும் பாதிப்புகள் தெரியவர சாத்தியக் கூறுகள் உள்ளன என்று ஃபோர்டிஸ் மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவிலுள்ள மருத்துவரான ராமன் காந்த் கூறுகிறார்.

செல்ஃபி எல்போ மிக அரிதான் பாதிப்பு. முழங்கையில் திசுக்கள் பாதிக்கப்பட்டு, மிகுந்த வலியை கொடுக்கும். முதுகுவலி, கழுத்து வலி போன்றே இதுவும் ஒர் வகையில் திரும்ப திரும்ப வரும் வலியாக மாறிவிடும்.

அதேபோல் தொடர்ந்து மெசேஸ் அனுப்புவது, மொபைலில் டைப் செய்து கொண்டேயிருப்பதும், விரல்களிலுள்ள எலும்புகளை பாதிக்கும். குறிப்பாக டீன் ஏஜினருக்கு எலும்புகள் பலமிழந்து, வளைந்து விடும் அபாயமுண்டு .

செல்ஃபி மிகவும் அளவாக உபயோகித்தால் எலும்புகளுக்கும் , தசைகளுக்கும் நலம். இந்த மாதிரி வலி ஏற்படும் சமயங்களில் ஐஸ் ஒத்தடம் தந்து கைகளுக்கு சின்ன சின்ன பயிற்சி அளிப்பது முக்கியம். ஆனால் இது நிரந்த தீர்வு கிடையாது. அளவோடு உபயோகித்தால் இந்த பிரச்சனை தோன்றாமலே காக்கலாம் என்று அனுபவமிக்க வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அப்படியும் செல்ஃபி எடுக்க வேண்டுமென்று தோன்றினால் இரு கைகளிலும் மாறி மாறி எடுத்தால், ஒரே கையில் பலவீனம் உண்டாகாமால் தடுக்கலாம். அல்லது செல்ஃபி ஸ்டிக் உபயோகித்தாலும் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

English summary

Taking frequent selfie leads to "selfie elbow"

Taking frequent selfie leads to "selfie elbow"
Desktop Bottom Promotion