தீராத கழுத்துவலி ஏற்படுகிறதா? சிசு ஆசனம் செய்யுங்கள்

By: Hemalatha V
Subscribe to Boldsky

கழுத்துவலி இப்போது குழந்தைகள் கூட உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அநேகபேர் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்துவலி உண்டாகிறது.

ஆரம்பத்தில் சாதரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை கொடுத்துவிடுகிறது. இது முதுகுத் தண்டுவட பிரச்சனைகளையும் தருகிறது.

இந்த வலியை குறைக்க வலி மருந்துகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு இயற்கையான முறையில் தீர்வளிக்க யோகாவினால் முடியும். எப்படி என பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிசு ஆசனம் :

சிசு ஆசனம் என்பது குழந்தையை போன்ற தோற்றத்தில் செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆசனம் யோகாவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். கழுத்துவலியை குறைத்து முதுகிற்கு பலமளிக்கும்.

 

செய்முறை-1 :

முதலில் முட்டி போட்டு அமருங்கள். இருகால்களும் இணைந்தபடி இருக்கவேண்டும். இப்போது மெதுவாக உடலை குனியுங்கள். தொடை மீது உடல் இருக்கும்படி வளையுங்கள்.

செய்முறை-2 :

நெற்றி தரையில் படும்படி வைத்து, கைகளை பக்கவாட்டில் தரையில் பதியுங்கள். இப்போது மார்பை தொடையில் அழுத்தவும்.

கைகளையும் தரையில் நன்றாக அழுத்தவும். இவ்வாறு செய்யும்போது முதுகுத் தண்டிலும் ஒரு அழுத்தம் உணர்வீர்கள்

 

செய்முறை-3 :

இப்போது சௌகரியமாக இருந்தால், ஆழ்ந்து மூச்சு விடுவதில் கவனம் செலுத்துங்கள். சில நொடிகள் இதே நிலையில் தொடருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும்.

பலன்கள் :

மன அழுத்தத்தை போக்கவும், முதுகுத் தண்டிற்கு நெகிழ்வுத்தன்மை உண்டாகும். முதுகு வலி குணமாகும். தசைகளுக்கு பலம் தரும். இடுப்பு தொடைகளுக்கு வளையும் தன்மை அதிகமாகும்.

குறிப்பு :

மூட்டு அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள், ஆகியவர்கள் இந்த யோகாவை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Sushuasana to Cure Neck Pain

to cure neck pain, benefits of yoga, to strengthen back,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter