உங்கள் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்பதன் அறிகுறிகள் !!

By: Hemalatha V
Subscribe to Boldsky

கல்லீரல் வெறும் உணவை செரிக்கும் வேலை மட்டும் செய்யவில்லை. உங்கள் கழிவுகளை அப்புறப்படுத்துவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது, ஹார்மோன், என்சைம்களை சுரக்கச் செய்வது, சக்தி, ஊட்டச்சத்து சேமித்துப் வைப்பது, சத்துக்களை ரத்தத்திற்கு அனுப்புவது, என பலப்பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

கல்லீரல் மிக முக்கியமான உறுப்பு. ஏனென்றால் மிக அதிக வேலை நாள்தோறும் கல்லீரல் செய்து கொண்டிருப்பதால் அதற்கு கூடுதல் கவனம் தருவது அவசியம்.

மிதமான அளவு உணவு, நிறைய நீர், தினமும் கை நிறைய காய்கள், பழங்கள் இபைகள்தான் அதன் நண்பர்கள். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, மது ஆகியவை துரோகிகள்(எதிரிகள் கூட அல்ல).

நீங்கள் நண்பர்களை விரும்பீர்களா? துரோகிகளை விரும்புவீர்களா?
உங்கள் கல்லீரல் இயல்பாக செயபடவில்லை என்பதன் அறிகுறிகளை தெரிந்து உடனே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

வயிற்று வலி :

வயிற்றின் வலது மேல்பக்கம் வலி, வீக்கம் இருந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள். கல்லீரலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். கல்லீரலில் பாதிப்பு, வீக்கம் ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு வயிற்றில் வலது மேல்பக்கம்(மார்பிற்கு கீழே) வலி ஏற்படும்.

ஏன் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது

உங்கள் உடலில் மற்ற செல்களைப் போலவே, பழைய ரத்த செல்களும் சிதையும். சிதையும்போது பிலிருபின் என்ற பொருள் வெளிப்படும். ஆரோக்கியமான கல்லீரல் , பிலிருபினை வெளியேற்றிவிடும். ஆனால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், பிலிருபின் வெளியேறாமால் ரத்தத்தில் கலந்துவிடும். இதுவே மஞ்சள் நிறமாக உங்கள் கண்களும், தோலும் மாறிவிடும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்று கூறுகிறோம்.

மூட்டு இணைப்புகளில் வலி :

ஆர்த்ரைடிஸ் போல் எல்லா இணைப்புகளிலும் வலி, பசியின்மை, உடல் சோர்வு, வயிறு அடைத்தல் ஆகியவை ஏற்பட்டால் இது கல்லீரல் பாதிப்படைந்ததை வெளிப்படுத்துகிறது என அர்த்தம்.

நரம்புப் பின்னல் :

ஆங்காங்கே நரம்புகள் சிலந்தி வலைப் போல் பின்னியிருந்தால் அது கல்லீரல் சரியாக ரத்தத்தை சுத்தம் செய்யாமல் அனுப்புவதால் அப்பகுதிகளில் ரத்தம் தேங்கியிருப்பதன் அறிகுறியாகும்.

அதீத ஞாபக மறதி :

அதிக அளவு காப்பர் ரத்தத்தில் கலக்கும்போது, அது மூளையிலும் சென்று தேங்கி விடும். இதனால் அல்சைமர் போன்ற நினைவுப் பிறழும் வியாதிகள் உண்டாகும். இது கல்லீரல் பாதிக்கப்பட்டதன் அறிகுறி.

தசை தளர்வு :

இடுப்பு, தொடை, ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தசை பெருகுதல், முகம் தாடை பகுதிகள் சதை அதிகமாக தொங்குதல் ஆகியவை கல்லீரலில் பிரச்சனை உண்டாவதன் அறிகுறிகளே. அதேபோல், காரணமில்லாமல் கால் தசைகள் மிகவும் பலமீனமடைந்து கால் வலி மற்றும் பாத மூட்டுகளில் வீக்கம் ஆகியவை ஏற்பட்டால் திரவ சம நிலை இல்லாமல் இருப்பதால் உண்டாகும். இதற்கு காரணம் கல்லீரல் சரியாக செய்ப்படவில்லை என்பதன் அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Signs of Liver Dysfunction

How to find out that your liver is not functioning ?
Story first published: Friday, September 16, 2016, 14:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter