For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் இறுதியில் இருக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டியவை!

By Hemalatha
|

நீங்கள் 45 ப்ளஸில் இருந்தால், ஹாட் ஃப்ளாஷை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? புரியவில்லை என்றால் இந்த அறிகுறிகள் சொன்னால் புரிய வாய்ப்புண்டு. அடிக்கடி தலைவலி, சருமம் சிவந்து போதல், கைகளில் நடுக்கம், அதிக வியர்வை ஆகியவைகள் ஏற்படும். மெனோபாஸ் சமயங்களில் இந்த மாதிரி பெரும்பாலாம பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

How to deal menopause hot flashes

நீங்கள் பாத்திருக்கலாம் உங்கள் அம்மாவோ அல்லது அந்த வயதுள்ள அத்தையோ காரணமேயில்லாமல் குடும்ப நபர்களிடம் சண்டை போடுவார்கள். எதற்கெடுத்தாலும் அழுவார்கள். கோபம் வந்தால் கத்துவார்கள். தனக்கு யாருமே இல்லை என புலம்புவார்கள்.

இதெல்லாம் மெனோபாஸ் சமயத்தில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால்தான் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள். மெனோபாஸ் பொதுவாக 45 வயதிற்கு மேல் 50 வயதிற்குள் வரும். அந்த சமயங்களில் வரும் உடல் மற்றும் மனம் சம்பந்தமான அறிகுறிகளைதான் ஹாட் ஃப்ளாஷ் என்று கூறுவார்கள்.

அதற்கான எளிய தீர்வுகள்தான் இங்கே கொடுக்கப்படுகிறது. அந்த சமயங்களில் நீங்கள் என்ன செய்ய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சிவான் அமல்பொடி (black cohosh) :

இது பட்டர் கப் குடும்ப வகையைச் சேர்ந்த மூலிகை செடியாகும். இது மெனோபாஸ் சமயத்தில் வரும் காரணமில்லா குழப்பங்களுக்கும், உபாதைகளுக்கும் தீர்வாக மருத்துவர்கள் பரிசீலிக்கிறார்கள். நீங்கள் மருத்துவரை அணுகி அதனைப் பற்றி விபரங்கள் கேட்டு உபயோகப்படுத்தினால், இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.

காபி :

நீங்கள் காபி பிரியை என்றால், மெனோபாஸ் சமயத்தில் காபி குடிப்பதை நிச்சயம் கைவிட வேண்டும். ஏனெனில் காபி உங்களுக்கு இன்னும் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும்.

இந்த வயதில் காரணமில்லாமல் அம்மாக்கள் எரிந்து விழுவார்கள். இதற்கு காபி குடிப்பதும் காரணம்தான். அதிலுள்ள சில காரணிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடனே நிறுத்த முடியவில்லை என்றாலும், மெதுவாய் காபியின் அளவை படிப்படியாக குறையுங்கள்.

புகைபிடிக்கும் பழக்கம் :

சிகரெட் குடிக்க வேண்டுமென்பது இல்லை. வீட்டில் யாராவது குடித்தாலும், அந்த புகையை நீங்களும் சுவாசிக்க நேர்ந்தால் இந்த பாதிப்பிற்கு தள்ளப்படுவீர்கள். சிகரெட்டிலுள்ள நிகோடின் ஹாட் ஃப்ளாஷினை அதிகரிக்கச் செய்கிறது என ஆய்வுகள் வெளியிட்டுள்ளன.

ஆகவே குடிப்பவர்களை விட, அதனை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சனைகளை அதிகம் உண்டாக்கும் என உங்கள் வீட்டில் உள்ளவர்களிடன் நீங்கள் எடுத்துரையுங்கள்.

உடற்பயிற்சி :

40 வயதிற்கு பின் கட்டாயம் உடற்பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இது மெனோபாஸ் அறிகுறிகளை வர விடாமல் உங்களை நிம்மதியா இயக்கும். தினமும் அரை மணி நேரம் இதற்கென ஒதுக்குங்கள்.

உடலில் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். உங்களை புத்துணர்வுடன் நடமாடச் செய்யும். யோகா, ஏரோபிக்ஸ், உடற்பயிற்சி, நடனம் என எதுவானாலும், பிடித்தது போல் உடல் உழைப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.

திரவ மற்றும் நீர் ஆகாரங்கள் :

இந்த வயதினில் நீர் மிகவும் அதைகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். போதிய இடைவெளியில் அடிக்கடி திரவ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். பழச் சாறு, நீர், கஞ்சி ஆகியவை உங்களை ஹாட் ஃப்ளாஷிலிருந்து தள்ளி இருக்க வைத்திருக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்தையும் நாம் அனுபவிக்க பழகிக் கொண்டால், நிம்மதியின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்களுக்கான் வாழ்க்கையை நீங்கள்தான் வாழ வேண்டும். பிடித்ததை செய்து மகிழ்ச்சியாய் இருங்கள். கவலைகளை தூர எறிந்து, மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

English summary

How to deal menopause hot flashes

How to deal menopause hot flashes
Desktop Bottom Promotion