உடல் எடையை குறையச் செய்யும் சிறந்த "பெட் டைம் " பானங்கள் எவை தெரியுமா?

உடல் எடை அதிகமாவதற்கு மிக முக்கிய காரனங்களில் ஒன்று இரவில் அதிகமாக நேரம் கழித்து சாப்பிடுவதுதான். இரவுகளில் குடிக்கப்படும் பானங்களால் உங்கள் உடல் எடையை குறைக்க முடியு. எப்படி என படியுங்கள்.

Subscribe to Boldsky

நாம் தூங்கும்போதுதான் திசுகள் வளரும். கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றும். மூளை அமைதி பெறும். மறு நாள் புதிதாக பிறந்தது போல் உணர்கிறோம்.

ஆனால் இரவுகளில் கண்டதையும் சாப்பிட்டால் கல்லீரல் அதனை ஜீரணம் செய்ய முடியாமல் அவதியுறும். மேலும் உடல் நலமும் பாதிக்கும்.

Best bed  time beverages for weigh loss

உங்களுக்கு உடல் எடை குறைய வேண்டுமென்றால் உங்களுக்காக சில டிப்ஸ். இங்கு சொல்லப்பட்டிருக்கும் பானங்களை குடிப்பதால் உடல் எடை வேகமாக குறைவதை பார்ப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பசும்பால் :

பசும்பால் குடித்தால் உடல் எடை கூடாது. கொழுப்பு குறைவாக இருக்கும். இதிலுள்ள கேசின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். இதனால் உடல் எடை வேகமாக குறையும்.

திராட்சை ஜூஸ் :

பொதுவாக இரவில் பழச் சாறுகள் குடிப்பதாய் யாரும் அறிவுறுத்துவதில்லை. ஆனால் சிறிதளவு திராட்சை சாறு அருந்தினால் நல்லதூக்கம் தரும்.

அதோடு கொழுப்பையும் எரிக்கும். திராட்சையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சேமிக்கும் வெள்ளை கொழுப்பை எரிக்கும் பழுப்பு கொழுப்பாக மாற்றுகிறது.

 

சீமை சாமந்தி தே நீர் :

வெதுவெதுப்பான சீமை சாமந்தி தே நீர் (Chamomile tea) குடிப்பதால் நரம்பு மண்டலம் சாந்தமடையும். ஆழ்ந்த தூக்கத்தை தரும். இது கிளைசின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குளுகோஸை கட்டுக்குள் வைத்திருக்கும்.

சோயா மில்க் :

சோயா பாலில் அதிகளவு அமினோ அமிலங்கள் இருக்கின்றன. அமினோ அமிலங்கள் ஏன் முக்கியமென்ரால் அவை தூக்கத்தின் அளவை அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசால் அளவை குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்.

கெஃபிர் :

இது புரோபயாடிக். பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நல்ல பேக்டீரியாக்களை அதிகப்படுத்தும். ஜீரண சக்தியை துரிதப்படுத்தும். கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Best bed time beverages for weigh loss

Best bed time beverages for weight loss
Please Wait while comments are loading...
Subscribe Newsletter