For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனையை குணப்படுத்துவது எப்படி?

குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை தலைதூக்கும். தலைவலி, மூக்கடைப்பு ஆகிய பிரச்சனைகளிலிருந்து எப்படி இயற்கை வழியில் குணபடுத்தலாம் என்பதுதான் இந்த கட்டுரை.

|

சைனஸ் குளிர்காலத்தில் அதிகமாகும். தலையில் நீர் இறங்கி முகத்திலுள்ள சைனஸ் அறைகளில் சென்றுவிடும். இதனால் அங்கே நீர் கோர்த்து வலி ஏஏபடுகிறது.

நெற்றி, கன்னம், மூக்கு ஆகிய பகுதிகளில் வீக்கம், ஏற்பட்டு பாரமாகிறது. அதோடு தொற்றுக் கிருமிகளும் பெருகி உபாதைகளை தர வாய்ப்புண்டு.

5 ways to cure sinusitis during winter

இதனை கட்டுப்படுத்தமுடியும். ஆனால் அதனையும் மீறி பாரம் உண்டானால் எப்படி குணப்படுத்தலாம் என இங்கே சொல்லப்பட்டிருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வழி 1

வழி 1

தேவையானவை :

யூக்கலிப்டஸ் எண்ணெய் - 3-4 துளிகள்

லாவெண்டர் எண்ணெய் - 3-4 துளிகள்

எலுமிச்சை எண்ணெய் - 3-4 துளிகள்

மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பின், மூக்கு, நெற்றி கழுத்து, பின் கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யுங்கள்.. அதன் வாசனையை மூக்கில் நுகருங்கள். நல்ல பலன் தரும். நீர் விலகும்.

வழி-2

வழி-2

ஆப்பிள் சைடர் வினிகர் - 2 ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1 கிளாஸ் அளவு

ஒரு ட்ம்ளர் நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிக்கவும். தினம் காலை மாலை என இருமுறை குடித்தால் நல்ல பலன் தெரியும்.

வழி -3

வழி -3

மிளகாய் பொடி - கால் ஸ்பூன்

தேன் - 2 ஸ்பூன்

எலுமிச்சை துறுவல்- சிறிதளவு

சுடு நீர் - 1 கப்

நன்றாக கொதித்த நீரில்ளகாய் பொடி மற்றும் எலுமிச்சை துறுவலை சேர்க்கவும். வெதுவெதுப்பான நிலையில் அதில் தேன் சேர்த்து மெல்ல பருகுங்கள்.

வழி - 4 :

வழி - 4 :

இஞ்சி தேநீர் :

இஞ்சி துறுவல் - சிறிதளவு

சுடு நீர் - 1 கப்

ஒரு கப் கொதித்த நீரில் இஞ்சி துறுவலை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைகக்வும் . பின்னர் வடிகட்டி அதில் மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

 வழி - 5

வழி - 5

குதிரை முள்ளங்கியை துருவி சாறெடுத்துக் கொள்ளுங்கள். அதனை 1 ஸ்பூன் அளவு காலை மாலை குடித்தால் சைனஸ் பிரச்சனை குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 ways to cure sinusitis during winter

5 ways to cure sinusitis during winter
Story first published: Wednesday, December 7, 2016, 13:40 [IST]
Desktop Bottom Promotion