For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்லிம் வயிறுக்கு... நீச்சல் அடித்தால் போதும்... தெரியுமா உங்களுக்கு?

By Super
|

உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் தொப்பை பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. அத்தகைய தொப்பை பிரச்சனை உங்களுக்கு இருக்கா? அதைக் குறைக்கப்படாத பாடுபடுகிறீர்களா? நடப்பது, ஓடுவது, ஜிம் என அனைத்தையும் செய்து பார்த்து விட்டு டல்லாக இருக்கிறீர்களா? இதை படியுங்கள் முதலில்!

நீச்சல் உடம்பைக் குறைக்க உதவும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. அந்த நீச்சலில் பல வகையான டெக்னிக்ஸ் உள்ளது. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தசையை வலுப்படுத்தும். அதில் வயிற்றுப் பகுதியைக் குறைக்கவும் வலுப்படுத்தவும் சில டெக்னிக்ஸ் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தான் இங்கு கூற இருக்கிறோம்... அதை பார்ப்போமா?

நீச்சலைப் பற்றிய சில தகவல்கள்:

நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். ஆனால் பிற உடற்பயிற்சிகளைச் சரியான முறையில் செய்ய வேண்டும். சரியான முறையில் செய்யவில்லை என்றால் உள்காயங்கள் ஏற்படும். ஆனால் நீச்சலில் இந்த வகை காயங்கள் குறைவே. மேலும் நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. சரி, இப்போது வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

How to Tone Your Stomach With Swimming

1. பிடித்த நீச்சல் வகையை வைத்துப் பல முழு-சுற்றுகளை முடிக்கவும். நீச்சலில் பொதுவான முறைகளான வண்ணத்துப்பபூச்சி அசைவு, பின்புறமாக நீச்சல் அடித்தல், முங்கு நீச்சல் என இவை அனைத்தும் வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும். இந்த மூன்று வகையையும் மாற்றி மாற்றி, ஒரு முழு-சுற்று செய்வதன் மூலம் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

2. தண்ணீரில் உடல் எடைக் குறைவாக இருப்பதாலும், எளிதில் அசைக்க முடிவதனாலும், நீந்தாமல் நடந்தாலே, உடல் வலிமை அடையும். அவ்வாறு நடக்கும் போது, நீர் குறைந்த பகுதியில் கால்களை மடக்கி முட்டியை வைத்து நெஞ்சைத் தொடச் செய்யவும். இவ்வாறு செய்யும் போது, முதுகு பகுதி நேராகவும், வயிறு சற்று உள்ளே இழுத்தவாறும் இருப்பது அவசியம். முட்டியை உயர்த்தும் போது, வயிறு நன்றாக அமுங்க வேண்டும்.

3. அதேப்போல் நீர் நிறைந்த பகுதியில் முன் கூறியவாறு செய்யும் போது, நீச்சல் குளத்தின் சுவரை நன்றாக பிடித்துக் கொள்வது கால்களை எளிதில் தூக்க உதவும். இந்த பயிற்சியை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவோ வேகமாக செய்வது நல்ல பலனைத் தரும்.

4. ஒரே இடத்தில் நின்று கொண்டு கையையும், கால்களையும் அசைப்பது கூட நல்ல பயிற்சி. இந்த பயிற்சி செய்யும் போது வலியே இருக்காது, ஆனால் நீரை விட்டு வெயியே வந்த பின் வலி உயிர் போகும். ஆகவே கவனம் தேவை. இந்த பயிற்சியைக் குறைந்த நேரம் செய்வது நல்லது.

5. அடுத்ததாக நீச்சல் பழகும் போது உபயோகிக்கும் பலகை ஒன்று உள்ளது. அதை ஆங்கிலத்தில் கிக்போர்டு (Kickboard) என்று கூறுவார்கள். நீச்சலைப் புதிதாக பழகுபவர்கள், இதனைப் பிடித்துக் கொண்டு கால்களை ஆட்டி நீந்துவார்கள். வயிறு குறையவும், இதையே செய்யலாம். ஆனால் நல்ல பலனைப் பெற கால்களையும், உடலையும் நீருக்கு மேல் வருவது போல செய்ய வேண்டும். அப்படி செய்தால் வயிறு நன்றாக குறையும். இந்த முறைப்படி நீச்சல் அடித்து வயிற்றுப் பகுதியைக் குறையுங்கள்.

கவனிக்க வேண்டியவை:

* நீச்சல் நல்ல பயிற்சி தான். ஆனால் நீரில் மூழ்கும் அபாயத்தை நாம் மறக்கக் கூடாது. எனவே எப்போதும் நிறைய பேர் இருப்பது போல பார்த்துக் கொள்ளவும்.

* நீச்சல் குளத்தில் காப்பாளர் இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் நீச்சல் குளத்தைத் தெரிந்தெடுப்பது நல்லது.

* நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும்.

English summary

How to Tone Your Stomach With Swimming | ஸ்லிம் வயிறுக்கு... நீச்சல் அடித்தால் போதும்... தெரியுமா உங்களுக்கு?

Swimming is one of the most effective exercises for toning and strengthening the stomach muscles. Not only is it one of the best cardiovascular workouts, but it will help strengthen muscles throughout your body and may improve your posture and endurance level over time.
Desktop Bottom Promotion