For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைப்பர்கொலஸ்ட்ரால்மியா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!

By Super
|

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு சராசரி அளவை விட அதிகமாகும் நிலை தான், ஹைப்பர்கொலஸ்ட்ரால்மியா (Hypercholesterolemia). அதுவும் இரத்தத்தில் 240 மில்லி கிராம் கொழுப்பு இருந்தால், அதுவே கொழுப்பின் அதிக அளவாகக் கருதப்படுகிறது. 200 மில்லி கிராம் அல்லது அதற்குக் கீழ் இருப்பது சராசரி அளவாகும்.

இரத்தத்தில் கொழுப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டப் பின்னரே தெரியும். அதுவரை எதுவுமே தெரியாது. இத்தகைய பிரச்சனையை நல்ல உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறைகளால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும், சீராக வைக்கவும் முடியும். அது எப்படியென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பில்லாத உணவுகள்

கொழுப்பில்லாத உணவுகள்

குறைந்த அளவு கொழுப்புள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கொழுப்பில்லாத இறைச்சி வகைகளை உண்ண வேண்டும். அமெரிக்க இதய நல அமைப்பின் (அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன்) கருத்துப்படி, மேற்கூறிய உணவுகள் உடலில் உள்ள கொழுப்பு அளவினை சராசரி அளவில் வைத்துக் கொள்ள உதவும் உணவு வகைகள் ஆகும்.

மீன் உணவுகள்

மீன் உணவுகள்

வாரமொருமுறை மீன் உணவுகளை சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள ஒமேகா-1 ஃபேட்டி ஆசிட்டானது, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கரைக்கும்.

சாலட்

சாலட்

அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளையும், பச்சைக் காய்கறிகளால் ஆன சாலட் வகைகளையும், உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உடல் எடையை வைத்துக் கொள்ள வேண்டும். அதிக உடலுழைப்பில் வாரத்திற்கு 5 முறையாவது ஈடுபடவும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் நாளொன்றிற்கு 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் உடற்பயிற்சி செய்தல், நடனம் ஆடுதல் போன்ற பயிற்சிகள் நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பவராக இருந்தால், புகைப்பிடிப்பதையும், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதையும் தவிர்க்கவும். முடிந்தவரை புகைப்பிடிக்கும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

இரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை

முதலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி வெறும் வயிற்றில் இரத்தப் பரிசோதனையை செய்து தெரிந்து கொள்ளவும். சரியான கால இடைவெளிகளில், கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை சராசரி அளவிற்குள் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மருத்துவரின் அறிவுரையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

ஹைப்பர்கொலஸ்ட்ரால்மியா ஒரு பரம்பரை நோயாகவும் ஏற்படலாம். அப்படி இருப்பின், இதனால் உடல் நல பாதிப்பு மற்றும் பிரச்சனைகள் ஏதேனும் ஏற்படுமா என்பதையும் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Prevent Hypercholesterolemia | ஹைப்பர்கொலஸ்ட்ரால்மியா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!

High cholesterol typically has no apparent symptoms until problems develop, including chest pain or possible heart attack. Simple lifestyle choices such as exercise and a healthy diet can help prevent hypercholesterolemia.
Desktop Bottom Promotion