For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நறுமண உணர்வை அதிகரிக்க சில டிப்ஸ்...

By Maha
|

மூக்கின் உதவியால் நறுமணத்தை உணர விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஏனெனில் அது நெருக்கமாக சுவை உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு காரணத்தினால், இது அவசியம். நீங்கள் உணவை சுவைக்கும் பொழுது மூக்கை கிள்ளுவது ஒரு வழி. பொதுவாக, நாம் ஒரு நுண்ணிய மெல்லிய வாசனை உள்ள மலர் அல்லது ஒருவரின் தோல் அல்லது இலையுதிர்காலத்தின் இலைகள், மண்வாசனை போன்ற சில வாசனைகளை கண்டால் மனம் அப்படியே சந்தோஷமாகவும், ஆழமான பரிமாணத்துடனும் விளங்கும். மேலும், ஒரு சராசரி மனிதனின் மூக்கால் கிட்டத்தட்ட 10,000 தனித்துவமான நறுமணங்களை கண்டறிய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

How to Improve Your Sense of Smell
1. ஏற்கனவே வாசனை செய்த பொருளை மனதில் நினைவு கொள்ளுதலும் ஒரு வகையான பயிற்சி. நம் உடம்பில் ஆண்டவனின் படைப்பால் சில விலங்குகளும் அதன் மூக்கினை கொண்டு மோப்பம் பிடித்து அதற்கு தேவையானவற்றை செய்து கொள்ளும் போது இந்த மனித பிறவியால் செய்ய முடியாதா என்ன?

2. ஒவ்வொரு பொருளுக்கும், உணவுக்கும் ஒரு தனித்துவமான நறுமணம் உள்ளது. அதனை கண்டறிதல் ஒரு முக்கியமான ஒன்று. ஏனெனில் கண் தெரியாதவன் எப்படி எதையும் வாசனையால் ஒன்றை அறிந்து கொள்கிறான். இந்த வாசனை உணர்வானது நரம்புகளால் மூளையின் உணர்ச்சி பகுதிக்கு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

3. பாஸ்ட் பூட் உணவுகள், பிரட் அல்லது சாலையோர உணவுகளின் வாசனைகள், சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் வாசனைகள், மிளகுக்கீரை மற்றும் இலவங்கப்பட்டையின் வாசனை, நாம் மனம் ஒருமுகப்படுதலுக்கும் வயிற்றில் செரிமானத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் எலுமிச்சை மற்றும் காபியின் வாசனை தெளிவான சிந்தனையையும், ஒருமுகப்படுதலின் அளவை அதிகரிக்கவும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வுகள் துரிதமாக கண்டறிந்துள்ளன.

4. அதிக சளியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சளி பிடித்த சமயம் உணவுகளின் வாசனையை உணர இயலாது. அப்பொழுது கெட்டு போன உணவுகளை கண்டறிய முடியாது. மூக்கின் நுனிகளில் உள்ள உணரும் நரம்பு, சவ்வுகளின் நெரிசலால் வாசனை மந்தமாகி உணவின் வாசனையை அறிய முடியாமல் செய்து விடும். அந்த சமயங்களில் மந்தமாக்கும் உணவுகளான பால், சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

இதனால் சுவையை பாதிக்கும் வகையில், உங்கள் மூக்கில் உள்ள உணர்வு செல்கள் பின் வழியே உங்கள் தொண்டைக்கு இணைக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்படும் நெரிசல் தடையால், அதனை செயலிழக்கச் செய்கிறது.

5. உங்கள் உணவில் அதிகமான துத்தநாகம் இருக்க வேண்டும். வாசனைத்தன்மை குறைவாக இருந்தால், அது உடம்பில் குறைவான கனிம துத்தநாகத்தின் குறைபாட்டை குறிப்பது. எனவே வாசனை உணர்வைப் பெருக்க, துத்தநாகம் நிறைந்த உணவுகளான கடல் சிப்பிகள், பயறு, சூரியகாந்தி விதைகள் போன்றவைகளை அதிகம் சேர்த்து கொள்ளவும். முடிந்த அளவு துத்தநாகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட முயலுங்கள்.

6. உடற்பயிற்சி செய்வதால் வாசனை உணர்வை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் ஈரப்பதம் நிறைந்த காற்றை சுவாசித்தால், வாசனை உணர்வு அதிகரிக்கப்படும். துர்நாற்றத்தில் இருந்து விலகி இருங்கள். நீண்ட நேரம் துர்நாற்றத்தை சுவாசித்தால், வாசனை உணரும் திறன், உணர்ச்சியில்லாமல் போய்விடும்.

இதனால் எது நல்ல உணவு, எது கேட்ட உணவு என்று அறியும் தன்மை அதிகரிக்கும். அதனால் மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும். நன்கு சுவாசியுங்கள், உங்கள் வாசனை திறனை அதிகரித்து கொள்ளுங்கள்.

English summary

How to Improve Your Sense of Smell | நறுமண உணர்வை அதிகரிக்க சில டிப்ஸ்...

There are many reasons you may wish to improve your sense of smell. For one thing, it's closely linked to your sense of taste. did you know that the average human nose can detect nearly 10,000 distinct scents?
Story first published: Saturday, February 2, 2013, 11:17 [IST]
Desktop Bottom Promotion