For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

By Super
|

ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற பலர் சரியான உண்மையைத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன. எனவே ஆல்கஹால் அருந்துபவர்கள், அதைக் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலில் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது, பீர், வோட்கா மற்றும் ஒயின் தான்.

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க? முதல்ல இத படிங்க...

இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

சுவாரஸ்யமான வேறு: உலகில் உள்ள விசித்திரமான ஆல்கஹால்கள்!!!

சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

வோட்காவின் நன்மைகள்

வோட்காவின் நன்மைகள்

வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.

வோட்காவின் நன்மைகள்

வோட்காவின் நன்மைகள்

இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.

வோட்காவின் நன்மைகள்

வோட்காவின் நன்மைகள்

இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

வோட்காவின் நன்மைகள்

வோட்காவின் நன்மைகள்

வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.

வோட்காவின் நன்மைகள்

வோட்காவின் நன்மைகள்

இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Drinking Alcohol Can Be Healthy

Alcohol has often been addressed as the ‘Wet Devil’ and deemed dangerous for health. But little do people know that alcohol consumption can have some surprising health benefits as well. The following article will illustrate the benefits of drinking.
Desktop Bottom Promotion