For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆளிவிதை மாத்திரைக்கும், மீன் எண்ணெய் மாத்திரைக்கும் உள்ள வேறுபாடுகள்!!!

By Super
|

ஆளிவிதை மாத்திரை மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் மிக அதிக அளவில் ஒமேகா-3 ( Omega-3) கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒமேகா-3 ஆராய்ச்சியின் படி, இந்த வகை அமிலங்கள் மிகுந்த ஆரோக்கியமான தோல், முடி, நகங்களைத் தருகின்றன. மேலும் மூளை நன்கு செயல்படவும், இந்த வகை ஒமேகா-3 அமிலங்கள் உதவுகின்றன. அதுமட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய ஆளிவிதை மாத்திரைகள், ஆளிவிதை எனப்படும் ஒரு தாவர வகையிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் மீன் எண்ணெய் மாத்திரைகள், அதன் பெயரிலேயே உள்ளது போல "காட்" (Cod) வகை மீன்களிலிருந்து பெறப்படுவதாகும். இவை இரண்டு வகைகளிலுமே நல்ல குணங்களும், சில ஒவ்வாத குணங்களும் இருக்கின்றன.

நன்மைகள்:

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய ஆளிவிதை எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் இரண்டுமே இரத்தத்திலுள்ள, ட்ரைகிளிசரைடு என்று சொல்லக்கூடிய கொழுப்பு வகையைக் குறைத்து மாரடைப்பு வருவதைக் குறைக்கிறது. மேலும் பக்க வாதம் வராமலும், இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவங்கள் படிவதைத் தடுக்கவும் செய்கிறது. அதிக இரத்த அழுத்தத்தைக் குறைத்தும், ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் (Rheumatoid Arthritis) என்று சொல்லக்கூடிய மூட்டுகளில் ஏற்படும் மூட்டு இறுக்கத்தைக் குறைக்கவும் செய்கிறது.

அல்சைமர் நோய் (Alzheimer's disease), சர்க்கரை நோய், கவனக்குறை மிகைச்சுறுதி (Attention Deficit Hyperactivity Disorder) நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர்கள், இவ்வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொண்டால் நன்மை கிடைக்கும் என்று ஒமேகா-3 ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

Flaxseed Tablets Vs. Fish Oil

[ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (Alphalinolenic Acid - ALA), ஐக்கோசப்டென்டோனிக் அமிலம் (Eicosapenetenoic Acid - EPA), டெக்கொசாஹெக்சாயினோயிக் அமிலம் (Decosahexaenoic Acid - DHA)]

ஆளிவிதையில் ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (ALA) என்று சொல்லக்கூடிய அமிலமே உள்ளது. இந்த வகைக் கொழுப்பு அமிலம் கல்லீரலில், ஐக்கோசப்டென்டோனிக் அமிலமாகவும் (EPA), டெக்கொசாஹெக்சாயினோயிக் அமிலமாகவும் ()DHAமாற்றப்படுகிறது. இந்த இரண்டு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான், உடலுக்கு நன்மை அளித்து, உடல் நலத்தை மேம்படுத்துகின்றன. இந்த வகை மாறுபாட்டினால் கிடைப்பது, முன்பு நம்பப்பட்டது போல் அன்றி, மிகக் குறைந்த அளவே நன்மை பயக்கிறது என்று தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health) நடத்திய ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டு கொழுப்பு அமிலங்களை விட ALA எனப்படும் ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் (ALA) மிகக்குறைந்த அளவே, நாம் உண்ணும் உணவு வகைகளில் உள்ளதாகவும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

ஆனால் மீன் எண்ணெயில் EPA மற்றும் DHA என்று சொல்லப்படக்கூடிய அமிலங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. எனவே மீன் எண்ணெய் மாத்திரையை உண்ணும் பொழுது, கல்லீரலில் கொழுப்பு அமில மாறுபாடு ஏற்படுவதற்கான அவசியமின்றி, நமது உடலானது முழு சத்துக்களையும் பெற்றுக் கொள்கிறது.

பாதரசக் கலப்பு:

கடலில் காணப்படும் பலவகை மீன்களின் உடலில் பாதரசம் கலந்துள்ளது. இந்த பாதரச நச்சானது மூளை நரம்புகளில் நச்சாக செயல்பட்டு, மூளையின் செயல்பாடுகளை பாதிப்பதோடு, சிறுநீரகக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. ஒமேகா-3 கொழுப்பு சத்துக்காக, மீன் எண்ணெய் மாத்திரையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது பாதரச நச்சுக்களையும் சேர்த்து உண்ணும் நிலை ஏற்படுகிறது. ஆனால் ஆளிவிதையில் இந்த நச்சு காணப்படுவதில்லை.

பக்க விளைவுகள்:

அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமில மாத்திரைகளை உட்கொண்டால், இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இரத்தக் குழாய்களில் ஏற்படும் கட்டிகளைக் கரைக்கும் மருந்து உண்பவர்கள், இதனை மிகக் கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மீன் எண்ணெய் மாத்திரை உண்ட பிறகு, மீனின் சுவை நாக்கில் நன்கு உணரப்படும்.

மாற்றுப்பொருள்கள்:

மீன் மற்றும் ஆளிவிதை மாத்திரைகள் இரண்டிலுமே சில தகாத விளைவுகள் ஏற்படத்தான் செய்கின்றன. இதற்கு, மாற்றாக தங்க நிறப் பாசி வகைகளை (Golden Algae) சேர்த்துக் கொள்ளலாம். இவ்வகை பாசி வகைகள் பண்ணைகளில் வளர்க்கப்படுவதால், இதில் மீன் எண்ணெயில் காணப்படுவது போன்ற பாதரச நச்சு காணப்படுவதில்லை. பல நிறுவனங்கள் தங்க நிற பாசி வகைகளில் EPA மற்றும் DHA எனப்படும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையாகவே இருப்பதாகக் கூறுகின்றன. அனால், ஆளிவிதையில், கொழுப்பு அமிலம் கல்லீரலில் மாறுபாடு அடைந்தால் தான் ஒப்பற்ற இரண்டு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைப் பெற முடியும். எனவே இந்த தங்க நிற பாசி, ஆளி விதையை விடவும் உயர்ந்தது ஆகும்.

English summary

Flaxseed Tablets Vs. Fish Oil | ஆளிவிதை மாத்திரைக்கும், மீன் எண்ணெய் மாத்திரைக்கும் உள்ள வேறுபாடுகள்!!!

Flaxseed tablets and fish oil are both rich in omega-3 fatty acids. According to research conducted by the Omega-3 Research Institute, these acids promote healthy skin, hair and nails. They are also essential for proper brain functioning, and supplementation with omega-3s has been used to effectively treat depression.
Desktop Bottom Promotion