For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு மூடி எலுமிச்சையை நோய்கள் தீர்க்க எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

எலுமிச்சை பலவித மருத்துவ குணங்கள் பெற்றுள்ளன. ஐவற்றை நோய்களை குணமாக்க எப்படி பயன்படுத்தலாம் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

எலுமிச்சைக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் சக்தியுண்டு. அதனால்தான் வாகனங்களில் அல்லது வீடு கடைகளின் முன் எலுமிச்சையை தொங்க விடுகிறோம்.

எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மிகச் சிறந்த பழமாக விளங்குகிறது. அதோடு நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களை சுத்தப்படுத்துகிறது. இப்படி பல அரிதான குணாதசியங்கள் பெற்றுள்ள எலுமிச்சை கொண்டு எந்த நோய்களை குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆக்சிஜன் உருவாக்கம் :

ஆக்சிஜன் உருவாக்கம் :

உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும்.

ரத்தக் கசிவு :

ரத்தக் கசிவு :

ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.

 ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.

நச்சுக்கள் வெளியேற :

நச்சுக்கள் வெளியேற :

எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும்.

இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.

சர்க்கரை வியாதிக்கு :

சர்க்கரை வியாதிக்கு :

சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.

புத்துணர்வு பெற :

புத்துணர்வு பெற :

நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.

சரும நோய்களுக்கு :

சரும நோய்களுக்கு :

கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Using methods of Lemon to treat for different ailments

Using methods of Lemon to treat for different ailments
Story first published: Friday, April 21, 2017, 12:42 [IST]
Desktop Bottom Promotion