நோய்களை தடுக்கவும், இளமையாக இருக்கவும் தேனை எவற்றோடு சாப்பிட வேண்டும்?

தேனோடு கலந்து எடுத்துக் கொள்ளப்படும் உணவுப் பொருட்களால் எந்த மாதிரியான உடல் பாதிப்புகள் சரியாகும் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

தேன் அற்புத பலன்களை பெற்றது. பல்வேறு மூலிகை மலர்களிடமிருந்து சேகரித்த தேன் துளிகளை சுமந்த தேனிக்களிடமிருந்து பெறப்படும் தேன் மிகவும் நல்லது. கொம்புதேன், மலைத்தேன் என இன்னும் பலவகைகளில் உள்ளது.

Types of food that  you eat with  Honey to stay  young

தேன் உறையும்தன்மை கொண்டது. கெட்டுபோகாது. குறிப்பாக மலைத்தேன் அருமையான மூலிகை குணங்களை பெற்றுள்ளது. தேன் நோய்களை குணமாக்கும் சக்தி கொண்டது.

தேனோடு சேர்க்கபப்டும் மற்ற பொருட்கள் இன்னும் பலம் பெற்று, நோய்களை குணமாக்கும் தன்மையாக மாறுகிறது. எந்த நோய்களுக்கு தேன் மருந்தாகிறது என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கண் பார்வை அதிகரிக்க :

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

இதய நோய்களை தடுக்க :

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

வாதம் குணமாக :

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட கீழ் வாதம் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க :

அரை ஸ்பூன் தேனுடன், அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு கலந்து அரை டம்ளர் நீரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

என்றும் இளமையுடன் இருக்க :

நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி அவற்றை சுத்தமான தேன் கலந்து ஊற வையுங்கள். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சுருக்கம் எட்டிப்பார்க்காது. இளமையாக இருப்பீர்கள். ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Types of food that you eat with Honey to stay young

Types of food that you eat with Honey to stay young
Please Wait while comments are loading...
Subscribe Newsletter