தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்? ஊட்டசத்து நிபுணரின் அறிவுரை!!

சீரக நீரை குடிப்பதால் பலவித நன்மைகளை நமது உடலுக்கு தருகிறது. நோய்கள் வராமல் காக்கிறது. அவ்வாறான நீங்கள் அறியாத நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம்.

Subscribe to Boldsky

சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள்.

இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உண்டாகும் பலன்களைப் பற்றி கூறுகிறார் பெங்களூரில் இருக்கும் அஞ்சு என்ற ஊட்டச்சத்து நிபுணர்.

சீரகம் பொதுவாக வயிறு உப்புசத்தை சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்த பாதிப்பை குணப்படுத்தும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை குடிப்பதால் இன்னும் பல அற்புத நன்மைகள் உண்டாகும். எவையென அவற்றை கண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பால் சுரக்க உதவும் :

சில தாய்மார்களுக்கு குழ்னதை பிறந்த சில வாரங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அவர்கள் தொடர்ச்சியாக சீரக நீரை குடித்து வந்தால் பால் சுரப்பது நீடிக்கும். அதிகமாகும்.

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் :

தினமும் வெறும் வயிற்றில் சர்கரை வியாதி உள்ளவர்கள் குடித்து வந்தால் சர்க்கரையில் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வரும்.

சுவாசப்பாதையை சீராக்கும் :

குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும்.

கல்லீரல் நச்சை வெளியேற்ற :

கல்லீரலில் குடிவும் அதிகப்படியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலில் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும் அதிகமாகும்.

மாதவிடாய் மற்றும் கர்ப்பிணிகளின் ஃபால்ஸ் வலி :

மாதவிடாயின் போது உண்டாகும் வலி மற்றும் கர்ப்ப காலத்தின் போது உண்டாகும் ஃபால்ஸ் வலியை போக்க சீரக நீர் உகந்தது.

முதுமையை தடுக்கும் :

சீரகத்தில் அதிகமாக விட்டமின் ஈ இருப்பதால் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கிறது. இது செல்ல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும். சுருக்களின்றி இளமையான சருமத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Incredible benefits of jeera water drinking on an empty stomach

Incredible benefits of jeera water drinking on an empty stomach
Story first published: Thursday, January 5, 2017, 12:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter